ஏப்ரல் மாத தொடக்கத்தில் இருந்து அனைத்து மாகாணங்களுக்கும் தட்டுப்பாடு இன்றி ஹைலண்ட் பால் மாவை உற்பத்தி செய்து விநியோகிக்கப் போவதாக மில்கோ அறிவித்துள்ளது.
சந்தையில் தற்போது பால் மாவுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், பால் மாவை மீள உற்பத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மில்கோவின் தலைவர் ரேணுகா பெரேரா தெரிவித்துள்ளார்.
கால்நடைத்துறை இராஜாங்க அமைச்சர் பி. ஹேரத் தலைமையில் அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலில் அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும், திரவப் பால் உற்பத்தியை அதிகரிப்பதற்கு அமைச்சு விசேட வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தி வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.




