ரஷ்யர்களிற்கு எதிரான வெறுப்பு பேச்சிற்கு பேஸ்புக் தற்காலிக அனுமதி?

Date:

ரஷ்ய ஜனாதிபதி புடினை கொல்வதற்கான அழைப்பு மற்றும் ரஷ்ய இராணுவ வீரர்களுக்கு எதிரான வன்முறைக்கு அழைப்பு, வெறுப்பு பதிவுகளை ஃபேஸ்புக் நிறுவனம் அனுமதிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வன்முறை மற்றும் வெறுப்பு பேச்சு தொடர்பான எந்தவிதமான பதிவுகளையும் சகித்துக்கொள்ள மாட்டோம் என கூறி அவற்றை அவ்வப்போது ஃபேஸ்புக் நிறுவனம் அகற்றி வருகிறது.

இந்நிலையில் உக்ரைன் மீதான போர் காரணமாக ரஷ்ய ஜனாதிபதி புடின், ரஷ்ய இராணுவ அதிகாரிகள், வீரர்கள், ரஷ்யாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் பிற நாட்டு தலைவர்களுக்கு எதிரான பதிவுகளுக்கு தற்காலிக அனுமதி வழங்கலாம் என ஃபேஸ்புக் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக ஃபேஸ்புக் பதிவுகளை தணிக்கை செய்யும் குழுவுக்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த மின்னஞ்சல்களை ரொய்ட்டர்ஸ் வெளியிட்டது.

இதேவேளை, பேஸ்புக் நிறுவனத்தின் உத்தியோகபூர்வ முடிவு தமக்கு தெரியாதென்றும், பேஸ்புக் அப்படி முடிவெடுத்திருந்தால் மெட்டா நிறுவனத்தின் அனைத்து சமூக ஊடகங்களையும் தமது நாட்டில் தடைசெய்வோமென ரஷ்யா அறிவித்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

கனடாவில் ATM கொள்ளை – தமிழர் கைது

கனடாவின்  பீல் பிராந்தியத்திலுள்ள – பிராம்ப்டனில் நடந்த மூன்று கொள்ளைச் சம்பவங்கள்...

ஹோர்முஸில் அமெரிக்காவின் சுங்கக்கட்டணம் மட்டுமே இருக்கலாம்!

ஈரானில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தத்தை பேச்சுவார்த்தையாளர்கள் முடிக்கத் தவறினால், முக்கியத்துவம்...

ஹோர்முஸ் ஜலசந்தியை மூடுவதாக அறிவித்தது ஈரான்

தெற்கு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களைக் கண்டித்து, முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்