கச்சதீவு அந்தோனியார் திருவிழா இன்று!

Date:

கச்சத்தீவு அந்தோனியார் ஆலய திருவிழா இன்றும், நாளையும் (வெள்ளி, சனிக்கிழமை) ஆகிய 2 நாட்கள் நடைபெறுகிறது.

திருவிழாவின் முதல் நாளான இன்று மாலை 5 மணி அளவில் அந்தோனியார் உருவம் பதித்த கொடியானது ஏற்றப்படுகின்றது. தொடர்ந்து சிலுவை பாதை திருப்பலியும், இரவில் அந்தோனியார் தேர் பவனியும் நடக்கிறது.

விழாவின் 2வது நாளான நாளை காலை 7 மணிக்கு திருவிழா திருப்பலி நடைபெறும். பின்னர் 9 மணியுடன் திருப்பலி முடிந்து கொடி இறக்கப்பட்டு திருவிழா நிறைவு பெறுகின்றது.

திருவிழாவையொட்டி,மண்டபம் முதல் ராமேஸ்வரம், தனுஷ்கோடி வரையிலான இந்திய கடல் பகுதியில் இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான 3 கப்பல்களும், இந்திய கடற்படைக்கு சொந்தமான ஒரு கப்பலும் நேற்று முதலே தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றன.

திருவிழாவுக்கு ராமேஸ்வரத்தில் இருந்து இன்று காலை சுமார் 10 மணியளவில் 4 படகுகளில் 80 பேர் புறப்பட்டனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து 100 பேர் செல்கின்றனர். கடற்றெரழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் திருவிழாவிற்கு செல்கிறார். இரு நாட்டு மீனவர்கள் மத்தியிலும் புரிந்துணர்வை ஏற்படுத்தும் சந்திப்பொன்றை அவர் ஏற்பாடு செய்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

வவுனியா நகரில் முதியவரின் சடலம் மீட்பு

வவுனியா நகரில், கொறவப்பொத்தானை வீதியில், பெரிய பள்ளிவாசலுக்கு அருகாமையில் முதியவர் ஒருவரின்...

போதைப்பொருளுடன் சிக்கிய மீன்பிடி படகு

தெற்கு கடலில் நடத்தப்பட்ட ஒரு சிறப்பு நடவடிக்கையின் போது, ​​பெருமளவு போதைப்பொருட்களை...

ஒரு சில கொடுங்கோலர்களால் உலகம் நாசமாகிறது: ட்ரம்பை மறைமுகமாக சாடிய போப்!

போர்களுக்காக பில்லியன் கணக்கில் செலவழிக்கும் தலைவர்களை போப் கடுமையாகச் சாடியதோடு, "ஒரு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்