25.5 C
Jaffna
December 1, 2023
இந்தியா

பஞ்சாபில் மிகப்பெரிய வெற்றியை பெறும் ஆம் ஆத்மி!

பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றும் சூழல் உள்ளது. ஆளும் காங்கிரஸ் அதிக பெரும் தோல்வியை சந்தித்துள்ளது.

பஞ்சாபில் 117 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. காங்கிரஸ் ஆளும் கட்சியாக இருக்கும் நிலையில், முக்கிய எதிர்க்கட்சியாக ஆம் ஆத்மியும் தீவிரமாக தேர்தல் களத்தில் பணியாற்றி இருந்தது.

தற்போது தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் பலவும் ஆம் ஆத்மிக்கு சாதமாக வந்தன.  அதன்படி, தனிப்பெரும்பான்மையுடன் ஆம் ஆத்மி பஞ்சாப்பில் ஆட்சியைப் பிடிக்கும் என பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன.

இந்தநிலையில் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. தொடக்கம் முதலே ஆம் ஆத்மி கட்சி அதிக இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. ஆம் ஆத்மி கட்சி மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றும் சூழல் உள்ளது.

மொத்தமுள்ள 117 ஆசனங்களில் ஆம் ஆத்மி இதுவரை 90 இடங்களில் வெற்றி அல்லது முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் 17 இடங்களில் வெற்றி அல்லது முன்னிலையில் உள்ளது. பா.ஜ.க 2 இடங்களில் வெற்றி அல்லது முன்னிலையில் உள்ளது

ஆளும் காங்கிரஸ் 2ம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. அக்கட்சியின் முதல்வர் வேட்பாளர் சன்னி ஒரு தொகுதியில் பின் தங்கியுள்ளார். அதுபோலவே மாநில காங்கிரஸ் தலைவர் சித்துவும் தனது தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளரிடம் பின் தங்கியுள்ளார்.

இதேவேளை, காங்கிரசிலிருந்து விலகி, தனிக்கட்சி ஆரம்பித்து, பாஜகவுடன் கூட்டு வைத்த அமரீந்தர் சிங் தனது பாட்டியாலா நகர் தொகுதியில் ஆம் ஆத்மி கட்சியின் அஜித் பால் சிங் கோலியிடம் தோல்வியடைந்தார்.

பஞ்சாப் முன்னாள் முதல்வர் அம்ரீந்தர் சிங் பாட்டியாலா நகர் தொகுதியில் ஆம் ஆத்மி கட்சியின் அஜித் பால் சிங் கோஹ்லியை விட தொடக்கத்தில் இருந்தே பின் தங்கி இருந்தார்.

இரண்டு முறை முதல்வராக பதவி வகித்த அம்ரீந்தர் சிங் இந்த முறை தோல்வியடைந்துள்ளார். முந்தைய 2017 தேர்தலில் அம்ரீந்தர் சிங்கின் வெற்றி வித்தியாசம் 49 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

2 மனைவி, 6 காதலிகள்: ஆடம்பர வாழ்க்கைக்கு திருடனாக மாறிய சமூக வலைத்தள பிரபலம்!

Pagetamil

‘இலங்கையில் தமிழ் தேசிய உணர்வை மங்கச் செய்து மதவெறியை பாஜக விதைப்பது வேதனை’: திருமாவளவன்

Pagetamil

வங்கக்கடலில் டிச.3இல் புயல் உருவாகிறது: சென்னை, புறநகர் மாவட்டங்களில் கனமழையால் சாலைகளில் வெள்ளம்

Pagetamil

திருமணம் செய்ய மறுத்த இளம் ஆசிரியை கடத்தல் (CCTV)

Pagetamil

இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.5 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!