Pagetamil
இலங்கை

முல்லைத்தீவில் கட்டுத் துப்பாக்கியில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு!

முல்லைத்தீவு – நெட்டாங்கண்டல் பிரதேசத்திற்கு உட்பட்ட சிராட்டிகுளம் பகுதியில் இன்று அதிகாலை காட்டிற்கு சென்ற குடும்பஸ்தர் ஒருவர் கட்டுத் துப்பாக்கியில் சிக்சி உயிரிழந்துள்ளார்.

நெட்டாங்கண்டல் உழவனேரி பகுதியினை சேர்ந்த 38 வயதுடைய தர்மலிங்கம் இளங்கோ என்ற குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார்.

கட்டுத்துவக்கு வெடித்ததில் படுகாயமடைந்த இவர் மீட்கப்பட்டு, மல்லாவி ஆதாரமருத்துவமனை கொண்டு செல்லும் போது உயிரிழந்துள்ளார்.

இவரது சடலம் மல்லாவி ஆதார மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து நெட்டாங்கண்டல் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்கள்.

பிரேத பிரசோதனை மற்றும் பொலிஸ் அறிக்கையின் பின்னர் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வடக்கு கிழக்கில் புராதன பௌத்த தளங்களை பாதுகாக்க விசேட திட்டங்கள் – புத்தசாசன அமைச்சர்

east tamil

துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

Pagetamil

இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

Pagetamil

புதிய வடிவில் TELL IGP மற்றும் l-need சேவைகள்

Pagetamil

யாழில் மீளவும் சோதனைச் சாவடிகள்: பொது பாதுகாப்பின் மேல் புதிய கேள்விகள்

east tamil

Leave a Comment