UPDATE: யாழில் பேருந்து சாரதியின் மூக்கு அறுப்பு!

Date:

யாழில் தனியார் பேருந்தை செலுத்திக் கொண்டிருந்த சாரதியின் மூக்கு வெட்டப்பட்டுள்ளது.

இந்த அதிர்ச்சி சம்பவம் நேற்று (8) இரவு இடம்பெற்றது.

பருத்தித்துறையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற தனியார் பேருந்தின் சாரதி, நீர்வேலி கந்தசுவாமி கோயிலுக்கு அண்மையில்  தாக்குதலுக்கு இலக்கானார்.

பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த இளைஞன் ஒருவரே சாரதியின் மூக்கை அறுத்துள்ளார்.

சம்பவ இடத்தில் பயணிகளை இறக்குவதற்காக பேருந்து நிறுத்தப்பட்ட போது, பேருந்திற்குள்ளிருந்த அந்த இளைஞன், சாரதியின் மூக்கை அறுத்து விட்டு தப்பியோடினார்.

அங்கு ஏற்கனவே தயாராக இருந்த சிலர், அந்த இளைஞனை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு தலைமறைவாகி விட்டனர்.

காயமடைந்த சாரதி, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட மேலதி வரி குறித்து விளக்கம்!

வாகன இறக்குமதி மீது விதிக்கப்பட்டுள்ள 50% மேலதிக வரி (Surcharge) குறித்து...

“என் பிள்ளைகளை பார்க்க விடுவதில்லை…” – கலங்கிய ரவி மோகன் கூறியது என்ன?

“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான்...

சமையலறையில் கசிப்பு உற்பத்தி

வீட்டின் குளியலறையில் இயங்கி வந்த கள்ளச் சாராய ஆலையில் அம்பாறை மாவட்ட...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்