சர்வதேச மகளிர் தினத்தை புறக்கணித்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம் ஒன்றை இன்று முன்னெடுத்தனர்.
குறித்த போராட்டம் இன்று காலை 11 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத்திற்கு முன்பாக இடம்பெற்றது.
இதன்போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் காணமல் போன தமது உறவுகளின் புகைப்படங்கள் மற்றும் பதாதைகளை ஏந்தியவாறு கோசங்களை எழுப்பி எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1