தென்கொரியாவில் பெரும் காட்டுத்தீ!

Date:

தென் கொரியாவில் கட்டுக்கடங்காமல் பரவும் காட்டுத்தீயால், சுமார் 5,000 பேர், வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

தீயில் 20க்கும் மேற்பட்ட வீடுகளும் 9 கட்டடங்களும் சேதமடைந்தன.

கிழக்குக் கரையோர மாநிலமான Uljinஇல் உள்ள மலைப்பகுதியில் காட்டுத்தீ தொடங்கியது.

அணுவாலை ஒன்றுக்கு அருகே காட்டுத்தீ பரவியதாகவும் பிறகு அது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

சாம்சியோக் நகரிலும் காட்டுத்தீ பரவியுள்ளது.

அங்கே நாட்டின் ஆகப் பெரிய திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு நிலையம் அமைந்துள்ளது.

சுமார் 3,300 ஹெக்டயர் அளவிலான வனப்பகுதி பாதிக்கப்பட்டுள்ளதாகத் தென் கொரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

காட்டுத்தீயைக் கட்டுக்குள் கொண்டுவர ஆயிரத்துக்கும் மேற்பட்ட தீயணைப்பாளர்கள் முயன்றுவருகின்றனர்.

இருப்பினும் அங்கு வீசும் பலத்த காற்று அவர்களின் பணிக்குத் தடையாக விளங்குகிறது.

spot_imgspot_img

More like this
Related

வித்தியா கொலையாளி எடுத்த விபரீத முடிவு: சடலத்தை பொறுப்பேற்க உறவினர்கள் மறுப்பு!

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் மரண தண்டனை கைதியொருவர் யாழ்ப்பாண சிறைச்சாலையில்...

கிளிநொச்சியில் இளம்தாயின் உயிரை பலியெடுத்த “புள்ளிங்கோ“க்கள்

கிளிநொச்சி கரடிபோக்கு உருத்திரபுரம் வீதியில் இன்று (25) பகல் இடம்பெற்ற வீதி விபத்தில்...

வாழைச்சேனையில் ஊடகவியலாளருக்கு மிரட்டல்

வாழைச்சேனையில் வீட்டுக்கு சென்ற 5 பேர் கொண்ட குழு ஒன்று தமிழ்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்