கால்பந்தாட்ட வீரர் டக்சன் பியூஸ்லஸின் உடல் மன்னாரிற்கு கொண்டு செல்லப்பட்டது!

Date:

மாவைதீவில் உயிரை மாய்த்துக் கொண்டதாக கூறப்படும் இலங்கை தேசிய கால்பந்தாட்ட வீரர் டக்சன் பியூஸ்லஸின் உடல்; நேற்று வெள்ளிக்கிழமை இரவு 10 மணியளவில் மன்னார் பனங்கட்டுக் கொட்டில் உள்ள அவரது இல்லத்திற்கு அஞ்சலிக்காக எடுத்து வரப்பட்டுள்ளது.

மாலைதீவில் கடந்த மாதம் 26 திகதி உயிரை மாய்த்துக் கொண்டதாக கூறப்படும் இலங்கை தேசிய கால்பந்தாட்ட வீரர் டக்சன் பியூஸ்லஸின் உடல்; கடந்த 3 ஆம் திகதி வியாழக்கிழமை அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக இலங்கை வந்தடைந்தது.

பிரேத பரிசோதனைக்காக நீர்கொழும்பு வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டு பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், மனைவி மற்றும் குடும்பத்தினரிடம் நீர்கொழும்பு வைத்தியசாலையில் வைத்து உடல் கையளிக்கப்பட்டது.

இந்த நிலையில் மனைவியிடம் ஒப்படைக்கப்பட நிலையில் உடல் யாழ்ப்பாணத்துக்கு அஞ்சலிக்காக எடுத்துச் செல்லப்பட்டது.

பின்னர் நேற்று வெள்ளிக்கிழமை மாலை யாழ்ப்பாணத்தில் இருந்து மன்னார் பனங்கட்டுக் கொட்டில் உள்ள அவரது இல்லத்திற்கு உடல் எடுத்து வரப்பட்டது.

யாழ்ப்பாணத்திலிருந்து மன்னார் வரும் வழியில் பூநகரி, முழங்காவில், தேவன் பிட்டி, விடத்தல் தீவு, ஆண்டாங்குளம், அடம்பன் போன்ற இடங்களைச் சேர்ந்த கால்பந்தாட்ட கழக வீரர்கள் பல ஆயிரக்கணக்கான மக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

மன்னார் தள்ளாடி சந்தியில் இருந்து பனங்கட்டுக் கொட்டில் உள்ள அவரது இல்லத்திற்கு பூதவுடல் நேற்று வெள்ளிக்கிழமை (4) இரவு 10 மணியளவில் அஞ்சலிக்காக எடுத்து வரப்பட்டது.

இதன் போது விளையாட்டு கழக வீரர்கள், வர்த்தகர்கள், மன்னார் மாவட்ட முச்சக்கர வண்டி உரிமையாளர்கள், பொதுமக்கள், அரசியல் பிரதிநிதிகள் என பல ஆயிரக்கணக்கானவர்கள் ஒன்றிணைந்து பவனியாக பூதவுடலை எடுத்து வந்தனர்.

மன்னார் பனங்கட்டுக் கொட்டில் உள்ள அவரது இல்லத்தில் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் திங்கட்கிழமை மாலை மன்னார் பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

அமெரிக்க- ஈரான் ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டது: அனைத்து முனைகளிலும் போருக்கு முற்றுப்புள்ளி!

லெபனான் உட்பட அனைத்து முனைகளிலும் இராணுவ நடவடிக்கைகளுக்கு "உடனடி மற்றும் நிரந்தர"...

இன்னும் சில மணி நேரத்தில் அமைதி ஒப்பந்தம்: ட்ரம்ப்

மத்திய கிழக்கு போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தம் இன்னும் சில "மணிநேரங்களில்"...

சுரேஷ் சாலேவை மிரட்டி மருந்து கொடுத்த தாதி!

ஈஸ்டர் ஞாயிறு அன்று நடந்த தொடர் பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்