ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் கடந்த வியாழக்கிழமை (03) மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை மாற்றத்தினால் கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன கடும் அதிருப்தி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கல்வி அமைச்சர் பதவியில் இருந்து தினேஷ் குணவர்தனவை நீக்கி, வீரவன்சவின் கீழ் உள்ள கைத்தொழில் அமைச்சை அவரிடம் வழங்க ஜனாதிபதி தீர்மானம் எடுத்திருந்தார்.
இதற்கு கடும் ஆட்சேபனை தெரிவித்த அவர், அமைச்சுப் பதவியை ஏற்காமலேயே தாம் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளதாக அரசாங்கத் தலைவர்களிடம் தெரிவித்துள்ளதாக தெரியவருகிறது.
இந்த எதிர்ப்பு காரணமாக, கடைசி நேரத்தில் கைத்தொழில் அமைச்சராக எஸ்.பி.திஸாநாயக்க நியமிக்கப்பட்டார்.
தினேஸ் குணவர்தனவின் அமைச்சில் மாற்றம் செய்யப்படவில்லை.




