அரசாங்கத்தின் அனைத்து உறுப்பினர்களும் தோல்வியடைந்து விட்டனர்!

Date:

அரசாங்கத்தின் அரசியல் வித்தைகளுக்கு தாங்கள் ஏமாறப்போவதில்லை என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் ஜே.சி.அலவத்துவல கருத்து தெரிவிக்கையில், அரசாங்கத்தின் அனைத்து உறுப்பினர்களும் தோல்வியடைந்தவர்கள் என்பதை நிரூபித்துள்ளனர்என்றார்.

நேற்றைய திடீர் அமைச்சரவை மறுசீரமைப்பு தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், சில அமைச்சரவை உறுப்பினர்கள் மக்கள் சார்பாக பேசினாலும், இன்றுவரை பொறுப்புகளை நிறைவேற்றத் தவறிவிட்டனர்.

மக்கள் பெட்ரோல், டீசல் மற்றும் பால்மாவை கொள்வனவு செய்வதற்கு வரிசையில் நின்று அன்றாட நடவடிக்கைகளில் ஈடுபட முடியாத நிலை காணப்படுவதாக தெரிவித்தார்.

இதுபோன்ற நிலைமைகளிற்கு மேலாக, கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்குப் பிறகு நாடு மிகப்பெரிய மின்வெட்டை அனுபவித்து வருவதாக குற்றம் சாட்டினார்.

வாக்குறுதிகள் மற்றும் கடமைகளை நிறைவேற்றத் தவறியதால் அரசாங்கத்தின் உறுப்பினர்கள் மக்களுக்கு முகம் கொடுக்க முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் அலவத்துவல தெரிவித்துள்ளார்.

மக்களை இனியும் ஏமாற்ற முடியாது என்றும் அவர் கூறினார்.

spot_imgspot_img

More like this
Related

னோஜனின் குடும்பத்திற்கு ரிஷாட் பதியுதீன் நேரில் ஆறுதல்: விடுதலைக்காகத் தீவிர முயற்சி

சவூதி அரேபியாவில் தண்டனை விதிக்கப்பட்டுத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள கல்முனை, நற்பிட்டிமுனையைச்...

சஹ்ரானைக் கண்டதுமில்லை-பேசியதுமில்லை-ரிசாட் பதியுதீன்

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் முக்கிய சூத்திரதாரியான சஹ்ரான் ஹாசிமுடன் தனக்கு...

யாழில். இரண்டு கடலமைகளுடன் ஒருவர் கைது

யாழ்ப்பாணம் , சேந்தான்குளம் பகுதியில் இன்றைய தினம் சனிக்கிழமை இரண்டு கடலமைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் சேத்தான்குளம் பகுதியில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்