இலங்கை

வவுனியாவில் கையெழுத்துப் போராட்டம்!

பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக வவுனியாவில் கையெழுத்துப் போராட்டம் இடம்பெற்றது.

தமிழ் தேசிய கூகூட்டமைப்பின் ஏற்பாட்டில் வவுனியா பழைய பேரூந்து நிலையம் முன்பாக இன்று (28) குறித்த கையெழுத்து போராட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து வவுனியாவின் இலுப்பையடி, வைரவபுளியங்குளம், குருமன்காடு, கனகராயன்குளம், செட்டிகுளம் ஆகிய பகுதிகளிலும் கையெழுத்து பெறும் நடவடிக்கைகள் இடம்பெற்றது. தமிழ், முஸ்லிம் மக்கள் பலரும் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கக் கோரி கையெழுத்துப் போராட்டத்தில் பங்கு பற்றினர்.

வவுனியாவில் இடம்பெற்ற ஆரம்ப நிகழ்வில் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுபர்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சிவஞானம் சிறிதரன், தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளரும், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினருமான ப.சத்தியலிங்கம், தமிழரசுக் கட்சியின் வாலிபன் முன்னனி தலைவர் கி.சேயோன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

மற்றொரு இராஜாங்க அமைச்சரும் பதவி விலகுகிறார்?

Pagetamil

டெல்டா திரிபுடன் மேலுமொரு இலங்கையர்!

Pagetamil

கிளிநொச்சியில் சமத்துவ கட்சி அலுவலகத்தில் அஞ்சலி!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!