Pagetamil
இலங்கை

ஜெனிவா செல்கிறது ரஞ்சன் விவகாரம்: தடுப்பதற்கு அரசு இரகசிய முயற்சியா?

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் தற்போது சிறைத்தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க விவகாரத்தை ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு எடுத்துச் செல்லும் முயற்சியில் ஐக்கிய மக்கள் சக்தி இறங்கியுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர் பெப்ரவரி 28 திங்கட்கிழமை ஜெனீவா செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ, தானும் சக பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்காரவும் எதிர்வரும் திங்கட்கிழமை ஜெனிவா செல்லவுள்ளதாக உறுதி செய்துள்ளார். “ரஞ்சன் ராமநாயக்கவின் விவகாரத்தை நாங்கள் ஜெனிவாவிற்கு எடுத்துச் செல்வோம்” என்று அவர் கூறினார்.

“எங்கள் ஜெனீவா விஜயத்தை தடுக்க இரகசிய நடவடிக்கை உள்ளது. எம்மை ஜெனிவா செல்வதைத் தடுக்கும் நோக்கில் பாராளுமன்ற வளாகத்துக்குள் பொதி ஒன்றை எடுத்துச் சென்றதாக எமக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது” என அவர் மேலும் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், அரசாங்கத்தின் பிரதம கொறடா ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, ஹரினை கைது செய்வதற்கான எந்தவொரு முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லையென தெரிவித்தள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

5 வருடங்களின் பின் பேஸ்புக்கால் சிக்கிய பொலிஸ் திருடன்!

Pagetamil

ஏப்ரல் 3 -10 வரை வடக்கு, கிழக்கில் மழைக்கு வாய்ப்பு: மற்றொரு காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகிறது!

Pagetamil

பிரித்தானியாவின் தடையால் கொதிக்கும் ஜேவிபி அரசு

Pagetamil

யாழில் அதிக போதையால் உயிரிழந்த இளைஞன்!

Pagetamil

வியாழேந்திரன் விளக்கமறியலில்!

Pagetamil

Leave a Comment