நெட்டிசன் ஒருவர் ஏடாகூடமாக கேட்ட கேள்விக்கு நடிகை சமந்தா கொடுத்துள்ளது பதில் வைரலாகியுள்ளது.
நடிகை சமந்தா சமீபத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்தார். பல ரசிகர்கள் சமந்தாவின் தனிப்பட்ட குணம், அவர் நடித்து வரும் படங்கள் குறித்த கேள்விகளை கேட்டனர். ஒரு சிலர் சமந்தாவின் விவாகரத்து முடிவு குறித்தும் கேள்வி கேட்டனர். அந்த கேள்விகளுக்கு நடிகை சமந்தா சுவாரஸ்யமான பதிலை அளித்து வந்தார்.
இந்த நிலையில் திடீரென நெட்டிசன் ஒருவர் ’நீங்கள் இது வரை இனப்பெருக்கம் செய்திருக்கிறீர்களா? உங்களுடன் சேர்ந்து இனப்பெருக்கம் செய்து கொள்ள எனக்கு ஆசையாக இருக்கிறது’ என்று சர்ச்சைக்குரிய வகையில் ஒரு கேள்வி கேட்டார்.
அந்த கேள்விக்கு பதிலளித்த சமந்தா ’ முதலில் ஒரு வாக்கியத்தில் இனப்பெருக்கம் என்னும் வார்த்தையை எப்படி பயன்படுத்துவது என்பதை கூகுளில் தேடி கற்றுக் கொள்ளுங்கள்’ என்று பதிலளித்துள்ளார்.
சமந்தாவின் இந்த பதில் வைரலாகி வருகிறது.