எமக்கு நடக்கும் அநீதியை திரும்பிப் பாருங்கள்: அரசியல்வாதிகள், மக்களிடம் கோரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்!

Date:

எமக்கு நடக்கும் அநீதியை பாராளுமன்ற உறுப்பினர்களும், மக்களும் திரும்பி பாருங்கள் என வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் செயலாளர் சிவானந்தம் ஜெனிற்றா தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் ஜனாதிபதிக்கு எதிர்ப்பு தெரிவித்து இடம்பெற்ற போராட்டத்தின் பின் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி பல்கலைக் கழகத்தை திறந்து வைப்பதற்காக வந்துள்ளார். நாம் இதுவரை காலமும் எமது உறவுகளை தேடி தெருவில் நின்று 13 வருடங்களாக போராடி வருகின்றோம். கையில் ஒப்படைக்கப்பட்ட உறவுகளுக்களையே தேடுகின்றோம். இந்த நாட்டில் நீதி மறுக்கப்பட்ட போதும் நாம் சர்வதேசத்தை நோக்கி தான் நீதிக்காக போராடிக் கொண்டிருக்கின்றோம்.

கொலைக் குற்றவாளியாக இருந்தவர் தற்போது இந்த நாட்டின் ஜனாதிபதியாக வந்து வவுனியாவில் உள்ள பல்கலைக்கழகத்தை திறந்து வைக்கின்றார். பாராளுமன்ற உறுப்பினர்கள் எதற்கு இருக்கிறார்கள். எமது பகுதியில் தமிழ் மொழிக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டிய நிலையில் சிங்கள மொழிக்கு முன்னுரிமை கொடுத்து பெயர் பலகையை மாற்றியுள்ளார்கள். அப்படியானவற்றை தட்டிக் கேட்க வேண்டியவர்கள் அமைதியாக இருக்கின்றார்கள்.

எமது உறவுகள் இதுவரை நீதிக்காக போராடிக் கொண்டு இருக்கிறார்கள். இதுவரை நீதி கிடைக்கவில்லை. அதனால் ஜனாதிபதி இங்கு வந்த போது நாம் எதிர்ப்பை காட்டுகின்றோம். நான் வீட்டில் புறப்பட்டத்தில் இருந்து நான் இங்கு வரும் வரை அரச புலனாய்வு துறையினர் பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்தார்கள். எமது உறவுகளை அங்கும் இங்குமாக மறித்து ஒன்று சேர விடாது தடுத்துள்ளார்கள். அப்படியான நிலையிலும் நாம் இங்கு வந்துள்ளோம். நாம் ஜனாதிபதியுடன் கதைக்க வரவில்லை.

ஜனாதிபதியிடம் நான்கு கேள்விகள் கேட்க வேண்டும். கொலையை செய்த குற்றவாளி ஜனாதிபதியாக இருக்கிறார். மக்களை ஏமாற்றி தான் செயற்படுகிறார்கள். எமக்கு நீதி மறுக்கப்பட்டுள்ளது. எனவே சர்வதேசம் இந்த நாட்டு ஜனாதிபதியை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் ஏற்றி நீதியைப் பெற்று தர வேண்டும். இதனை வலியுறுத்தி நாம் பல வருடமாக போராடுகின்றோம்.

இந்த மண்ணில் எமக்கு நீதியைப் பெற கருத்து சுதந்திரத்தைக் கூட பரிமாற முடியவில்லை. எம்மை மிகவும் வேனைக்குரியதாக நடத்துகிறார்கள். கோவிட்டை பொருட்படுத்தாமல் நாம் செத்தாலும் பரவாயில்லை. எமது உறவுகள் தான் வேண்டும் என போராடுகின்றோம். எமக்கு நடக்கும் அநீதியை பாராளுமன்ற உறுப்பினர்களும், மக்களும் திரும்பி பாருங்கள். எமக்கான பாதைகள் மறிக்கப்படுகின்றன. அரச புலனாய்வாளர்கள் அச்சுறுத்துகின்றார்கள். எமது உறவுகளுக்காகவே போராடுகிறோம். மார்ச்சில் நடைபெறும் ஐ.நா கூட்டத்தில் ஆவது சர்வதேசம் நீதியைப் பெற்றுத் தரவேண்டும். நாம் இழப்பீடையோ அல்லது மரண சான்றிதழையோ கோரவில்லை. நீதியே வேண்டும் எனத் தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

நீதிமன்றத்தில் அம்பலமாகும் உயிர்த்த ஞாயிறு சதித்திட்டம்: கோட்டாவின் கூலிப்படையாக செயற்பட்ட பிள்ளையான் குழு!

2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் குறித்த நீதிமன்ற...

மயிலத்தமடு மேய்ச்சல் தரைக்கு காணியை விடுவிக்க பணிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் நீண்டகால பிரச்சினையாக இருந்துவரும் மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரைக்காக,...

இனி நான் மஹிந்த அணியில் இல்லை… அநுரவிற்கே ஆதரவு: அந்தர் பல்டியடித்த சுமணரத்ன தேரர்!

மட்டக்களப்புக்கு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மேற்கொண்ட பயணத்தின் போது நடைபெற்ற...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்