யாழ் வட்டுக்கோட்டை, அராலி, செட்டியர் மடம் சந்தியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் இன்று சனிக்கிழமை அதிகாலை (12) இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு, உடையார் கட்டு பகுதியை சொந்த இடமாகவும், வட்டுக்கோட்டை பகுதியியை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி நிரோஜன் (22) என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அவருடன் பயணித்த வட்டுக்கோட்டை மேற்கு பகுதியை சேர்ந்த அல்பினோ வசந்த் (20) என்ற இளைஞர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
கட்டுப்படுத்த முடியாத அதி வேகம் காரணமாகவே இந்த விபத்து இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



