சமாஜ்வாதி பிரமுகர் ஆசிரம வளாகத்தில் காணாமல் போன பெண் உடல் கண்டெடுப்பு

Date:

உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியைச் சேர்ந்த தலித் சமூகத்தைச் சேர்ந்த 22 வயதான இளம்பெண் ஒருவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு காணாமல் போனார். அவரது தாய் புகார் அளித்தும் போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை. சமாஜ்வாதி கட்சி முன்னாள் எம்எல்ஏ பகதூர் சிங்கின் மகன் ரஜோல் சிங் தனது மகளை கடத்தியதாக பெண்ணின் தாயார் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தார்.

இந்நிலையில், பகதூர் சிங்குக்கு சொந்தமான ஆசிரம வளாகத்தில் இருந்து காணாமல் போன பெண்ணின் சடலம் நேற்று முன்தினம் காலை கண்டெடுக்கப்பட்டது. ஆசிரம வளாகத்தில் உள்ள காலி நிலத்தில் இருந்து பெண்ணின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. இதையடுத்து பெண்ணின் உடல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் முன்னாள் எம்எல்ஏ மகன் ரஜோல் சிங்கை கைது செய்யபட்டுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

மின்சாரம் தாக்கி இளைஞன் பலி

கிளிநொச்சியில் மின்சாரம் தாக்கி இளைஞன் உயிரிழந்துள்ளார். தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னைநீராவி -...

ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல்

அப்பாச்சி ஹெலிகொப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டதற்குப் பதிலடியாக, செவ்வாய்க்கிழமை மாலை அமெரிக்க இராணுவம்...

கிளிநொச்சி இளைஞன் கைது செய்யப்பட்டதை கண்டிக்கும் கனடாவின் பிராம்டன் நகர மேயர்!

இலங்கையின் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ், 24 வயதான சொல்லிசை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்