பாணந்துறை பிரதான தபால் நிலையத்தில் இருந்து விநியோகிக்கப்பட வேண்டிய ஒரு தொகுதி கடிதங்கள் பின்வத்தை, சாந்தி மாவத்தை கடற்கரையில் உள்ள முட்புதருக்கு அருகாமையில் நேற்று (10) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நகை அடமானம் குறித்த அறிவிப்புகள், நேர்முகத் தேர்வு அழைப்புக்கள் மற்றும் வங்கி விவரங்கள், பல்வேறு பில்கள் மற்றும் தனிப்பட்ட கடிதங்கள் உள்ளிட்ட 99 முக்கிய கடிதங்களை போலீசார் கண்டுபிடித்தனர்.
குறித்த கடிதங்களை உரிமையாளர்களுக்கு விநியோகிப்பதற்காக பாணந்துறை தபால் நிலையத்திலிருந்து எடுத்துச் சென்ற இரண்டு உத்தியோகத்தர்களும் பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.



