சில அத்தியாவசியப் பொருட்களுக்கு சிறிய தட்டுப்பாடு காணப்பட்டாலும் ஏனைய அனைத்து அத்தியாவசியப் பொருட்களுக்கும் போதுமான அளவு கையிருப்பு இருப்பதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நுகர்வோருக்கு அத்தியாவசிய பொருட்களை தட்டுப்பாடு இன்றி வழங்குவதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட குழுவின் உறுப்பினர்களுடனான சந்திப்பின் போதே நிதியமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
இன்றைய கூட்டத்தின் போது, பால் மா, எரிவாயு, கோதுமை மா மற்றும் சீமெந்து ஆகியவற்றுக்கு சிறிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், ஏனைய அனைத்து அத்தியாவசிய பொருட்களுக்கும் போதுமான அளவு கையிருப்பு உள்ளதாகவும் நிதியமைச்சு தெரிவித்துள்ளது.



