முல்லைத்தீவு, குருந்தூர் மலைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு செல்லவுள்ளது.
குருந்தூர் மலையடிவாரத்தில் தமிழ் மக்களின் பாரம்பரிய விவசாய நிலங்களில் பயிர்ச்செய்கை அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், அந்த பகுதிக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பினர் செல்லவுள்ளனர்.
தமது காணி உரிமை இழக்கப்படுவது குறித்து பிரதேச மக்கள் கூட்டமைப்பின் தலைமையிடம் முறையிட்டதை தொடர்ந்து, அந்த பகுதி நிலைமைகளை மதிப்பிட்டு, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு எம்.ஏ.சுமந்திரனிடம் கூறப்பட்டது.
இதனடிப்படையில் நாளை எம்.ஏ.சுமந்திரன், இரா.சாணக்கியன் உள்ளிட்டவர்கள் குருந்தூர் மலை செல்கிறார்கள்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1