இலங்கை நோக்கி வந்த ஹெரோயின்: கடற்படையை கண்டதும் கடலில் கொட்டிய 9 பேர் கைது!

Date:

இலங்கைக்கு ஹெரோயின் கடத்தி வந்த வெளிநாட்டு மீன்பிடி படகொன்றை கைப்பற்றி கடற்படையினர், அதிலிருந்த 9 பேரையும் கைது செய்துள்ளனர்.

200 கிலோகிராம் ஹெரோயினும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இலங்கையிலிருந்து 2,002 கிலோமீற்றர் தெற்கே சர்வதேச கடற்பரப்பில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

கடற்படை, பொலிஸ் மற்றும் புலனாய்வுப் பிரிவினரால் ஜனவரி 26 ஆம் திகதி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

ஹெராயினை உள்ளுர் படகுக்கு மாற்றுவதற்கு தயாரான போது, வெளிநாட்டு படகு கைப்பற்றப்பட்டது.

கடற்படையினர் வெளிநாட்டு படகை இடைமறித்த போது ஹெரோயின் போதைப்பொருள் கடலில் வீசப்பட்டதுடன் சந்தேகநபர்களிடம் இருந்து 200 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

ஒன்பது சந்தேக நபர்களும் கொழும்பு துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்கள் ஈரானிய பிரஜைகளென கருதப்படுகிறது.

சந்தேகநபர்கள், போதைப்பொருள் மற்றும் செய்மதி தொலைபேசிகள் தொடர்பில் கடற்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகம் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

முச்சக்கரவண்டி சாரதிக்கு மயக்க மருந்து கொடுத்து கொள்ளை!

மட்டக்களப்பு நகரில் முச்சக்கரவண்டியை வாடகைக்கு அமர்த்தி கொண்டு சென்று சாரதிக்கு மயக்க...

யாழிலிருந்து சென்ற ரயில் மோதி பெண் பலி

காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த சொகுசு ரயிலில் மோதி பெண் ஒருவர்...

யாழில் பாடசாலை மாணவி ஏழரை மாத கர்ப்பம்: சகோதரன் உள்ளிட்ட இரு இளைஞர்கள் கைது!

யாழில் 15 வயதான பாடசாலை மாணவியொருவர் ஏழரை மாத கர்ப்பிணியாக அடையாளம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்