யாழில் பாடசாலை மாணவி ஏழரை மாத கர்ப்பம்: சகோதரன் உள்ளிட்ட இரு இளைஞர்கள் கைது!

Date:

யாழில் 15 வயதான பாடசாலை மாணவியொருவர் ஏழரை மாத கர்ப்பிணியாக அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரை வல்லுறவுக்குள்ளாக்கியதாக சகோதரன் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டனர்.

இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பண்டத்தரிப்பு, பனிப்புலம் பகுதியில் இந்த சம்பவம் நடந்தது.

பாடசாலை மாணவியான 15 வயது சிறுமி, வயிற்று வலி இருப்பதாக தாயாரிடம் கூறியதையடுத்து, வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். வைத்திய பரிசோதனையில், மாணவி ஏழரை மாத கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது.

அதுவரை மாணவி பாடசாலை சென்று வந்தார்.

மாணவி கர்ப்பமாக இருப்பது தெரிந்ததும், தாயார் உடனடியாக இளவாலை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றார்.

பொலிசார் மாணவியை கைது செய்து, வைத்திய பரிசோதனையின் பின் விசாரணை நடத்தினர். தனது தாயாரின் சகோதரியின் மகனான- ஒன்றுவிட்ட சகோதரன்- ஒருவரும், மற்றொரு நபரும் தன்னை வெவ்வேறு சந்தர்ப்பங்களில் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கியதாக மாணவி தெரிவித்தார்.

அவரது தகவலுக்கமைய 17, 20 வயதான இருவர் கைது செய்யப்பட்டனர்.

சிறுமி குழந்தை பிரசவித்த பின்னர், டிஎன்ஏ பரிசோதனையின் அடிப்படையில் மேலதிக விசாரணை நடத்தப்படும்.

spot_imgspot_img

More like this
Related

மாளிகா வீதியில் வடிகான் துப்புரவுப் பணி : ஏ.எம். ஜாஹீரின் கோரிக்கைக்கு இணங்க தவிசாளர் பாஸ்கரனின் பணிப்பில் நடவடிக்கை

மாளிகைக்காடு பிரதான பாதையான மாளிகா வீதியில் நீண்டகாலமாக காணப்பட்ட வடிகான் அடைப்புகள்...

செம்மணி

100 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணியில் 507 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள...

மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி இராணுவ பாதுகாப்பு மோட்டார்சைக்கிள் இராணுவ ரோந்து நடவடிக்கையடுத்து – பரபரப்பு

மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் பொலிசார் இணைந்து...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்