இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களை கட்டுப்படுத்த வலியுறுத்தி, யாழ் மாவட்ட மீனவர்கள் பிரமாண்ட போராட்டத்தைஆரம்பித்துள்ளனர்.
யாழ் மாவட்ட செயலகம் முடக்கப்பட்டுள்ளதுடன், ஏ9 பிரதான வீதியும் முடக்கப்பட்டுள்ளது.
இதனால் யாழ் நகருக்கான போக்குவரத்து பாதிக்கப்பட்டு, வீதியில் நெரிசல் ஏற்பட்டது. பொலிசார் தற்போது மாற்று பாதைகளில் போக்குவரத்தை ஒழுங்கமைத்துள்ளனர்.
இந்திய மீனவர்களின் அத்துமீறலால் தமது கடற்றொழில் உபகரணங்கள் அழிக்கப்பட்டு வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருவதாக மீனவர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்கள். இந்த விவகாரம் விஸ்பரூபமெடுத்து தற்போது உயிர்ப்பலியெடுக்கும் நிலைமையேற்பட்டுள்ளது.
அண்மையில் இந்திய இழுவைப்படகு மோதி வடமராட்சி கிழக்கை சேர்ந்த இரண்டு மீனவர்கள் உயிரிழந்தனர்.
இதை தொடர்ந்து பருத்தித்துறை உள்ளிட்ட கரையோர பிரதேசங்களில் இன்று 4வது நாளாக போராட்டம் நடந்து வருகிறது.

