28.2 C
Jaffna
April 20, 2024
இலங்கை

மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கைது செய்ய நடவடிக்கை!

மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கைது செய்ய விசேட நடவடிக்கையெடுக்கப்படுவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சிரேஷ்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண, பல்வேறு சேவைகளை பெற்றுக் கொள்வதற்காக வருகை தரும் நபர்கள் தொடர்பில் தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்ட தரவுகளை மதிப்பிட்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அதிகளவான லொறி மற்றும் பஸ் சாரதிகள் போதையில் வாகனங்களை செலுத்துவது தெரியவந்துள்ளதாக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் 24ஆம் திகதி 1,213 நபர்கள் சாரதி அனுமதிப்பத்திரத்துக்கான மருத்துவச் சான்றிதழ்களைப் பெறுவதற்காக போக்குவரத்து மருத்துவ நிறுவனத்திற்கு வருகை தந்துள்ளனர்.

குறித்த தினத்தில் பெறப்பட்ட மாதிரிகளில் 145 மாதிரிகளில் பல்வேறு போதைப் பொருட்கள் இருந்ததாக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

கஞ்சா, ஹெராயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் பாவிக்கும் நபர்கள் ஓட்டுநர் உரிமத்தைப் பெற விண்ணப்பித்ததை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர், அதே நேரத்தில் தொடர்ந்து மது அருந்துபவர்களும் விண்ணப்பதாரர்களில் இருந்தனர்.

அந்தத் தரவுகளின் அடிப்படையில், போதையில் வாகனம் செலுத்திய நபர்களைக் கண்டறியும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

ஒருவர் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாகக் கண்டறியப்பட்டால், உரிமம் ரத்து செய்யப்படும், ரூ.25,000 அபராதம் மற்றும் சிறைத் தண்டனையும் விதிக்கப்படும் என்றார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பாலித தெவரப்பெருமவின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய ரணில்

Pagetamil

வடக்கில் சுற்றுலா பயணிகளுக்கு தங்குமிடம் வழங்குவோர் பதிவு செய்ய வேண்டும்!

Pagetamil

யாழ்ப்பாணத்துக்கு ஏற்படப் போகும் பேராபத்து: கிரிக்கெட்டை காட்டி மக்களை மயக்கும் உத்தியா?

Pagetamil

சாப்பிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட நபர்!

Pagetamil

காங்கேசன்துறையில் உயிர்காப்பு நீச்சல் பிரிவு

Pagetamil

Leave a Comment