25.9 C
Jaffna
January 3, 2025
Pagetamil
இலங்கை

வடமராட்சி கிழக்கில் காணாமல் போன இரண்டு மீனவர்களும் சடலங்களாக மீட்பு!

யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு வத்திராயனிலிருந்து கடலுக்கு சென்று காணாமல் போன இரண்டு மீனவர்களும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

கடந்த வியாழக்கிழமை பிற்பகல் கடற்றொழிலுக்கு சென்ற யோசேப் பிரேம்குமார், அருண்குமார் தணிகைமாறன் என்ற இரண்டு மீனவர்களுமே காணாமல் போயிருந்தனர். இவர்களை தேடும் பணி தொடர்ந்து இடம்பெற்று வந்தது.

கடந்த 28ஆம் திகதி தேடுதலின் போது, காணாமல் போன மீனவர்கள் பயன்படுத்திய வலைகள் அறுக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது.

அவர்கள் பயணித்த படகு, பாரிய படகினால் மோதி மூழ்கடிக்கப்பட்டிருக்கலாமென உறவினர்கள் அச்சம் வௌியிட்டிருந்தனர்.

இந்த நிலையில் இன்று ஒரு சடலம் ஆழியவளை பகுதியில் கரையொதுங்கியது. மற்றைய சடலம் கேவிலுக்கு அண்மையாக கடலில் மிதந்த நிலையில் அடையாளம் காணப்பட்டது. அந்த சடலமும் தற்போது ஆழியவளைக்கு எடுத்து வரப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஏமாற்றி அழைத்துச் செல்லப்பட்ட யுவதி ஓமானில் உயிர்மாய்த்தார்

Pagetamil

‘கைதிகளும் மனிதர்களே; சங்கிலியால் பிணைத்து வராதீர்கள்’: நீதவான் எச்சரிக்கை!

Pagetamil

உயர்தரத்தில் கல்வி பயிலும் போதே மாணவர்கள் பாடசாலையில் இருந்து விலகுவது ஏன்? – ஹரிணி அமரசூரிய

east tamil

இலங்கையில் பிறப்பு வீதம் – வெளியான அதிர்ச்சித் தகவல்

east tamil

யாழில் புதுவருட அட்டகாசம்: வீதியில் சென்றவர்களை காரணமேயில்லாமல் தாக்கிய சம்பவத்தில் 3 பேர் கைது!

Pagetamil

Leave a Comment