தென்மராட்சியில் முதியவரின் சடலம் மீட்பு!

Date:

சாவகச்சேரி மறவன்புலவு, தனங்கிளப்பு பகுதியில் வீடொன்றில் 62 வயதான முதியவரின் சடலம் மீட்க்கப்பட்டுள்ளது.

இன்று மாலை அவரது வீட்டின் விராந்தையில் சந்தேகத்திற்கு இடமான நிலையில் கிடந்த முதியவர் தொடர்பில் அயலவர்களால் சாவகச்சேரி பொலிஸாரிடம் தகவல் வழங்கியுள்ளனர்.

சம்பவ இடத்திற்குச் சென்ற சாவகச்சேரி பொலிஸார் பரிசோதித்த போது குறித்த நபர் உயிரிழந்துள்ளமை தெரிய வந்தது.

உயிரிழந்தவர் மறவன்புலன் தனங்கிளப்பை சேர்ந்த 62 வயதான சுப்பிரமணியம் தவராசா என்பராவார்.

இவரது குடும்பத்தின் யாழ்ப்பாணத்தில் வசித்து வரும் நிலையில் இவர் பல காலமாக தனித்தே வசித்து வருவதாக கூறப்படுகிறது. இறப்பு தொடர்பாக சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

கடத்திக் கொன்றவரை புதைத்து, அதன் மேல் வாழை மரம் நட்ட ஈ.பி.டி.பி உறுப்பினர்கள் 8 பேருக்கு மரணதண்டனை!

ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த ஒருவரை கடத்திக் கொலை செய்த...

டிட்வா புயலால் சுமார் ஓராண்டாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் மீண்டும் நகர்வு!

டிட்வா (Ditwah) புயலால் ஏற்பட்ட கடுமையான பாதிப்புகளினால், கம்பளை – உலப்பனை...

கடுவெல மின்சாதன விற்பனை நிலையத்தில் பயங்கர தீ விபத்து – ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழப்பு!

இலங்கையின் கடுவெல நகரில் அமைந்துள்ள மின்சார மற்றும் இலத்திரனியல் உபகரணங்கள் விற்பனை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்