வன்னியின் பெரும் போர் முதல்நாள்: புது. மகாவித்தியாலயம் 188; கிளி.மகாவித்தியாலயம் 83/2

Date:

வன்னியின் பெரும்போர் முதல் நாள் ஆட்டம் இன்று நிறைவு பெறும் போது, கிளிநொச்சி மகாவித்தியாலய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 83 ஓட்டங்களை பெற்றிருந்தது.

10 வது வன்னியின் பெரும்போர் என அழைக்கப்படும் கிளிநொச்சி மகாவித்தியாலயம் மற்றும் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி அணிகளிற்கிடையிலான நட்புக்கிண்ண கடினப்பந்து சுற்றுப்போட்டியானது இன்று கிளிநொச்சி மகா வித்தியாலய மைதானத்தில் காலை ஆரம்பமாகியது.

ஆரம்ப நிகழ்வுகளை தொடர்ந்து நாணயச் சுழற்சியில் கிளிநொச்சி மகா வித்தியாலய அணி வெற்றி பெற்று முதலில் களத்தடுப்பை தீர்மானிக்க புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி அணி துடுப்பெடுத்தாடியது

முதலில் துடுப்பெடுத்தாடிய புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி அணி 78.02 பந்து வீச்சு நிறைவில் 188 ஓட்டங்களிற்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது. அதிகபட்சமாக ம.தேனுஜன் 158 பந்துகளில் 07 நான்கு ஓட்டம் அடங்களாக 70 ஓட்டங்களையும், சானுஜன் 22 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர்.

பந்து வீச்சில் கிளிநொச்சி மகா வித்தியாலய அணிசார்பாக அபிசாந், பிரவிந்தன் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கிளிநொச்சி மகா வித்தியாலய அணி 17.05 பந்து பரிமாற்றங்கள் நிறைவில் 2 விக்கெட் இழப்பிற்கு  83 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் இன்றைய முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

சாத்வீகன் ஆட்டமிழக்காமல் 30 ஓட்டங்களையும், அணித்தலைவர் பிரவிந்தன் 28ஓட்டங்களையும் பெற்றிருந்தனர்.

போட்டியின் இரண்டாம் நாள் போட்டிகள் நாளை கிளிநொச்சி மகாவித்தியாலய மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

‘விமானத்தை வீழ்த்த விரும்பினேன்… சாவுக்கு அஞ்சவில்லை’: துணை விமானி ‘பகீர்’!

பெரும்பாலும் இஸ்ரேலியர்களான 170-க்கும் மேற்பட்டோரை ஏற்றிச் சென்ற பயணிகள் விமானத்தை, கப்டன்...

ஒக்டோபர் இறுதிக்குள் முத்தரப்பு பேச்சுவார்த்தை: ஜெலென்ஸ்கி

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான புதிய சுற்றுப்...

பேஸ்புக் நண்பரால் அடித்துக்கொல்லப்பட்ட இளைஞன்

ஃபேஸ்புக் மூலம் அறிமுகமான நண்பருடன் ஏற்பட்ட தகராறின் போது தடியால் தாக்கப்பட்டதில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்