விசாரணைக்கு அழைக்கும்போது ஆஜராவேன்: கே.டி.ஆர் போலீஸில் கடிதம்

Date:

விசாரணைக்கு அழைக்கும்போது ஆஜராவேன் என போலீஸில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தரப்பில் நேற்று கடிதம் தாக்கல் செய்யப்பட்டது.

வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.3 கோடி மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட கே.டி.ராஜேந்திர பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.

வில்லிபுத்தூரில் உள்ள 2வது நீதித்துறை நடுவர் மன்றத்தில் கே.டி.ராஜேந்திரபாலாஜியின் பாஸ்போர்ட்டை அவரது வழக்கறிஞர் ஆனந்தகுமார் ஒப்படைத்தார். அதையடுத்து திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த கே.டி.ராஜேந்திரபாலாஜி கடந்த 13ஆம் தேதி வெளியே வந்தார்.

இந்நிலையில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி விசாரணைக்கு எப்போது அழைத்தாலும் நேரில் ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைப்பு தருவதாக கே.டி.ராஜேந்திரபாலாஜி தரப்பில் அவரது வழக்கறிஞர் விருதுநகர் மாவட்டக் குற்றப்பிரிவு அலுவலகத்தில் நேற்று கடிதம் தாக்கல் செய்தார்.

spot_imgspot_img

More like this
Related

சுரேஷ் சாலேவை பரிசோதித்த 10 மருத்துவர்களுக்கும் நீதிமன்றம் அழைப்பாணை

முன்னாள் அரச புலனாய்வுச் சேவையின் (SIS) பணிப்பாளரும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான...

டிக்கோயா இரட்டைக் கொலை: தலைமறைவாகியிருந்த சந்தேகநபர் யாழ்ப்பாணத்தில் கைது!

டிக்கோயா நகரில் இடம்பெற்ற வயோதிப தம்பதியின் இரட்டைக் கொலைச் சம்பவத்தின் பிரதான...

மயிலத்தமடு கால்நடை பண்ணையாளர்களை பயிர் செய்கையாளர்கள் அச்சுறுத்துவது தொடர்பாக பொலிஸ் அத்தியட்சகரிடம் முறைப்பாடு

மட்டக்களப்பு, மயிலத்தமடு மற்றும் மாதவனை பகுதியில் கால்நடைப் பண்ணையாளர்களை சட்டவிரோதமாகப் பயிர்ச்செய்கையில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்