கொழும்பு பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக வணிக பொருளாதாரத்தின் மூத்த பேராசிரியர் எச்.டி.கருணாரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
ஏப்ரல் 12 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்த நியமனத்தை வழங்கியுள்ளதாக ஜனாதிபதியின் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க உறுதிப்படுத்தியுள்ளார்.



