விபத்தில் 2 விமானப்படையினர் காயம்!

Date:

திருகோணமலை கந்தளாய் பிரதான வீதி ஆண்டாங்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு விமானப்படை உத்தியோகத்தர்கள் பலத்த படுகாயமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இவ்விபத்து நேற்று (09) இரவு 7.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

ஆண்டாங்குளம் பகுதியில் வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அதிசொகுசு வேனுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் சீனக்குடா விமான நிலையத்தில் கடமையாற்றி வரும் விமானப்படை உத்தியோகத்தர்கள் இருவர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரியவருகின்றது.

காயமடைந்தவர்கள் விமானப்படை உத்தியோகத்தர்களான ஆர்.எம். நுவன் சமீர பண்டார (32 வயது) மற்றும் சுரங்க கருணாரத்ன (43 வயது) ஆகிய இருவருமே படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த இருவரும் மது போதையில் இருந்ததாகவும் வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்தார்.

குறித்த விபத்து தொடர்பில் உப்புவெளி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

–ரவ்பீக் பாயிஸ்-

spot_imgspot_img

More like this
Related

கல்முனையில் “எமக்கான சமூக நீதி எழட்டும்” ஊடகவியலாளர் சந்திப்பு

முஸ்லிம் சமூகத்திற்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராகவும், சமூக உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பவர்களின்...

கல்முனை பொலிஸ் நிலையத்தில் 2026ஆம் ஆண்டுக்கான உத்தியோகபூர்வ அணிவகுப்பு மற்றும் பரிசோதனை

கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் 2026 ஆம்...

‘விமானத்தை வீழ்த்த விரும்பினேன்… சாவுக்கு அஞ்சவில்லை’: துணை விமானி ‘பகீர்’!

பெரும்பாலும் இஸ்ரேலியர்களான 170-க்கும் மேற்பட்டோரை ஏற்றிச் சென்ற பயணிகள் விமானத்தை, கப்டன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்