வேகமாக வந்து பாலத்துடன் மோதி உயிரிழந்த குடும்பஸ்தர்!

Date:

கண்டாவளை பாலத்துடன் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பரந்தன் முல்லைத்தீவு பிரதான வீதியில் அமைந்துள்ள வெளிகண்டல் பாலத்துடன், மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் மோதி உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 9.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

தருமபுரத்திலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த மோர்டார் சைக்கிள் அதிக வேகத்துடன் பயணித்துள்ள நிலையில், வேகக் கட்டுப்பாட்டையிழந்து பாலத்துடன் மோதுண்டுள்ளது.

மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது

குறித்த விபத்து சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கிளிநொச்சி கட்டைக்காடு பகுதியைச் சேர்ந்த பத்மநாதன் ரவிந்திரன் எனும் 3 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு குறித்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

அனோஜன் சிவராசாவின் மரண தண்டனை இரத்துச் செய்யப்பட்டமை சகோதரத்துவ நம்பிக்கையை வலுப்படுத்துகிறது – காரைதீவு தவிசாளர் சுப்ரமணியம் பாஸ்கரன்

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த இலங்கைப் பிரஜையான அனோஜன் சிவராசாவுக்கு...

உக்ரைன் ஆயுதங்களின் வேகத்தைக் கட்டுப்படுத்திய Starlink? அமெரிக்கா மீது சந்தேகம்!

உக்ரைனின் இராணுவ நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படும் Starlink இணையச் சேவையில் விதிக்கப்பட்ட வேகக்...

அமெரிக்காவில் சிறிய விமானம் விபத்து – குழந்தை உட்பட 6 பேர் உயிரிழப்பு!

அமெரிக்காவின் விஸ்கான்சின் மாநிலத்தில் இடம்பெற்ற சிறிய விமான விபத்தில் குழந்தை உட்பட...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்