29.3 C
Jaffna
March 29, 2024
முக்கியச் செய்திகள்

சினிமா பாணி சம்பவம்: கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து தப்பிச்செல்ல முயன்றவர் மடக்கிப் பிடிப்பு!

சினிமா பட பாணியில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து தப்பிச் செல்ல முயன்ற வெளிநாட்டவர் ஒருவர் இலங்கை விமானப்படை கொமாண்டோக்கள், விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சீசெல்ஸ் நாட்டு கடவுச்சீட்டை வைத்துள்ளவர், போலி பாஸ்போர்ட் மூலம் அபுதாபி வழியாக பிரான்சின் பாரிஸுக்கு தப்பிச் செல்ல முயன்றபோது, இன்று காலை இந்த சம்பவம் நடந்தது.

விமான நிலையத்தின் கூரையில் ஏறி விமான நிலையத்தை விட்டு தப்பிச் செல்ல முயன்ற போது கைது செய்யப்பட்டுள்ளார்.

அபுதாபி ஊடாக பிரான்ஸின் பரிஸ் நகருக்குச் செல்லும் EY-265 என்ற Etihad Airways விமானத்தில் ஏறுவதற்காக இன்று (10) அதிகாலை 02.45 மணியளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை அந்த நபர் வந்தடைந்தார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தின் புறப்படும் முனையத்திற்குள் பிரவேசித்த அவர், விமானப் பயணச்சீட்டைப் பெற்றுக் கொண்டு, தனது ஆவணங்களை சமர்ப்பிக்க குடியகல்வு நிலையத்திற்கு வந்துள்ளார்.

அவரால் வழங்கப்பட்ட சீசெல்ஸ் தேசிய கடவுச்சீட்டில் சந்தேகம் கொண்ட குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் தொழில்நுட்ப விசாரணைகளுக்காக எல்லை கண்காணிப்பு பிரிவின் அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையில், குடியகழ்வுத் துறை அதிகாரிகள் அந்த வெளிநாட்டவரை விசாரித்துக் கொண்டிருந்தபோது, ​​திரைப்பட பாணியில் அவர் திடீரென நாற்காலியில் இருந்து எழுந்து புறப்படும் முனையத்தை நோக்கி ஓடினார்.

அவர் புறப்படும் முனையம் வழியாகவும், சுங்க வளாகம் வழியாகவும் ஓடி, விமான நிலைய பாதுகாப்புப் படையினரின் பாதுகாவலர்களைத் தாண்டி குதித்தார்.

மிக சில விநாடிகளில் அவர் பாதுகாப்புக்களை கடந்து, தாவிக்குதித்து சென்றதை பார்த்து அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.

அப்போது விமான நிலைய புறப்படும் முனையத்தில் கடமையாற்றிய குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டளை அதிகாரி உடனடியாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள விமானப்படை தளம், விமான நிலைய பொலிஸார் மற்றும் விமான நிலைய பாதுகாப்பு பிரதானிகளுக்கு அறிவித்தார்.

அப்போது நான்கு குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளும் விமான நிலைய பாதுகாப்பு படையினரும் அவரை பின்தொடர்ந்து வந்தனர்.

அந்த மின்னல் மனிதர் அருகில் உள்ள சுவரில் ஏறி, விமான நிலைய வெளியேறும் முனையத்தின் மேற்கூரையில் ஏறி, அதில் மறைந்தார்.

விமான நிலையத்தில் இருந்த பாதுகாப்பு கமராக்களால் அவரது இருப்பிடத்தை அடையாளம் கண்ட விமானப்படை கமாண்டோக்கள் குழு உடனடியாக அவர் கூரையில் மறைந்திருந்த இடத்திதை சுற்றிவளைத்தனர்.

இதன் பின்னர் குறித்த வெளிநாட்டவர் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியேறும் வழியில் கூரையின் மீது பாய்ந்து குதித்து விமான நிலையத்தை விட்டு தப்பிச் செல்ல தயாரானதாக தெரிவிக்கப்படுகின்றது.

அப்போது குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள், விமானப்படை கொமாண்டோக்கள், விமான நிலைய பொலிஸ் மற்றும் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் என ஏராளமானோர் அவரை சுற்றி வளைத்துள்ளனர்.

விமான நிலையத்திலிருந்து வெளியேறும் அனைத்து இடங்களிலும் பாதுகாப்பை பலப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சுமார் ஒரு மணித்தியாலத்தின் பின் விமான நிலையத்தின் வெளியேறும் வாயில் அருகே அவர் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

இந்த வெளிநாட்டவரின் கழுத்தில் 4693 என்ற இலக்கம் தெளிவாக காணப்பட்டது.

அவர் வெளிநாட்டு சிறையில் இருந்து தப்பியோடியவராகவோ, வெளிநாட்டில் தேடப்படும் நபராகவோ அல்லது ஏதேனும் சர்வதேச பயங்கரவாதக் குழுவைச் சேர்ந்தவராகவோ இருக்கலாம் என விமான நிலையப் பாதுகாப்புப் படையினர் சந்தேகிக்கின்றனர்.

குறிப்பாக சுவர் ஓட்டுதல், கூரை குதித்தல், விமான நிலைய வளாகத்தில் பாதுகாப்புக் காவலர்களுக்கு சவால் விடுதல் ஆகியவை இந்த விஷயத்தில் நன்கு பயிற்சி பெற்ற ஒருவரால் மட்டுமே செய்யக்கூடிய செயல்கள்.

கைது செய்யப்பட்ட நபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
3
+1
1
+1
0
+1
0
+1
0
+1
2

இதையும் படியுங்கள்

4 ஆம் திகதி மைத்திரியை நீதிமன்றத்தில் வாக்குமூலமளிக்க உத்தரவு!

Pagetamil

இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தும் விதமாக பேசிய ஞானசாரருக்கு 4 வருட கடூழிய சிறைத்தண்டனை!

Pagetamil

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்: 3வது நாளாக கடும் மழைக்கு மத்தியில் போராட்டம்

Pagetamil

காசாவில் உடனடி போர் நிறுத்தத்தை கோரி ஐ.நா பாதுகாப்புசபையில் தீர்மானம்!

Pagetamil

இலங்கைக்கு பெரு வெற்றி

Pagetamil

Leave a Comment