கொழும்பின் பல பகுதிகளில் இன்று காலை 8 மணி முதல் நள்ளிரவு வரை 16 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
கொழும்பு, தெஹிவளை – கல்கிசை, ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே மற்றும் கடுவெல மாநகர சபைக்குட்பட்ட பகுதிகள், மஹரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவ நகர சபை பகுதிகள், கொட்டிகாவத்தை – முல்லேரியா பிரதேச சபை மற்றும் இரத்மலானை ஆகிய பகுதிகளுக்குள் நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
அம்பத்தளை நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் மின்சார விநியோக பாதையில் மேற்கொள்ளப்படவுள்ள பராமரிப்புப் பணிகள் காரணமாகவே இந்த நீர்வெட்டு ஏற்பட்டுள்ளது.




