இந்தியாவிடமிருந்து 900 மில்லியன் டொலர் பெறுமதியான இரண்டு நிதி உதவிப் பொதிகள் இம்மாதம் இலங்கையை வந்தடையும் என தகவல் வெளியாகியுள்ளது.
400 மில்லியன் டொலர் இடமாற்று வசதி மற்றும் எரிபொருளுக்கான 500 மில்லியன் டொலர் கடன் வரி ஆகிய இரண்டும் இந்த மாதம் இலங்கையை வந்தடையும் என்று இந்திய அரசாங்க வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த கடன்களில் ஒன்று ஜனவரி 10 ஆம் திகதிக்குள் நாட்டின் திறைசேரியை வந்தடையும் என்று நம்பப்படுகிறது.
நிதியமைச்சர் பசில் ராஜபக்ச அண்மையில் இந்தியா சென்று, இந்த நிதியுதவிகளை கோரியிருந்தார். அவரது பயணத்தை தொடர்ந்து, சேடமிழுக்கும் இலங்கை பொருளாதாரத்திற்கு ஒட்சிசன் வழங்க இந்தியா முடிவு செய்துள்ளது.
இதேவேளை. பசில் ராஜபக்ச இந்தியா சென்று திரும்பிய போது, ‘வெறுங்கையுடன் திரும்பினார் பசில்’, ‘மோடியை சந்திக்காமலே திரும்பினார்’ என தமிழ் பத்திரிகைகள் வழக்கம் போல உசுப்பேற்றல் செய்திகளை வெளியிட்டு மகிழ்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.