நாட்டின் பல பகுதிகளில் 40 மோட்டார் சைக்கிள்களை திருடிய 79 வயது ‘திருடரை’ எப்பாவல பொலிஸாரால் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் சந்தேக நபர் மின்னேரிய புகையிரத நிலைய சந்தியில் வசிக்கும் 79 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தையாவார். கைது செய்யப்படும்போது அவர் திருடிய 06 மோட்டார் சைக்கிள்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
திருட்டுச் சம்பவங்களுக்கு பெயர் போன இந்த முதியவர் மீது, 17 மோட்டார் சைக்கிள்கள் திருடப்பட்டமை தொடர்பில் ஏற்கனவே வழக்கு தொடரப்பட்டிருந்தது. நாட்டின் முக்கிய குற்றவாளிகளில் ஒருவராக இந்த முதியவரும் இருந்தார்.
எப்பாவல பகுதியில் மோட்டார் சைக்கிள் திருட்டு முறைப்பாடுகளையடுத்து பொலிசார் சிசிரிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், திருடர் சிக்கினார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
1
+1