கிளிநொச்சிப் பெண் கொலை: 22 வயது கணவன், 19 வயது மனைவிக்கு விளக்கமறியல்!

Date:

கிளிநொச்சியில் வயோதிபப் பெண்ணொருவரை கொலை செய்த சந்தேக நபர்களான 22 வயதான கணவனையும், 19 வயதான மனைவியையும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பூநகரி தம்பிராயை சேர்ந்த இராசேந்திரம் இராசலட்சுமி (67) என்பவரே கொல்லப்பட்டார்.

அவரது 5 பிள்ளைகளும் வெளிநாட்டில் வசித்து வருகின்றனர். பிரித்தானியாவில் தனது மகனுடன் தங்கியிருந்த அவர், கடந்த 3 வருடங்களின் முன்னர் நாடு திரும்பியிருந்தார்.

கிளிநொச்சி, அம்பாள்குளத்தில் தங்கியிருந்த அவர், கடந்த 26ஆம் திகதி கொலை செய்யப்பட்ட நிலையில், சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

கொலைச்சந்தேகநபர்களான 22 வயதுடைய இளைஞன் மற்றும், துணைபுரிந்த அவரது 19 வயதான மனைவி இருவரும் நேற்று மாலை கிளிநொச்சி நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டனர்.

இதன் போது இரு சந்தேக நபர்களையும் எதிர்வரும் 12.01.2022 வரை விளக்கமறியலில் வைக்க மன்று உத்தரவிட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

கிளிநொச்சி விபத்தில் இளைஞன் பலி

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உருத்திரபுரம் D7 பகுதியில் இன்று 03.09.2026 மதியம்...

சுகாதாரப் பரிசோதனை என்ற போர்வையில் மாணவர்களுக்கு பாலியல் தொல்லை? 51 வயது அதிகாரி கைது

கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட பிரபல பாடசாலையொன்றில் 20-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளிடம்...

தமிழ் மொழியில் தேசிய முதலிடம்! 188 புள்ளிகளுடன் யாழ் மாணவன் சபின் சாதனை

புலமைப் பரிசில் பரீட்சையில் தமிழ் மொழி மூலம் தேசிய முதலிடம் –...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்