எரிவாயு சிலிண்டரை செங்குத்தாக கொண்டு செல்லுங்கள்!

Date:

எரிவாயு சிலிண்டர்களை கிடைமட்டமாக கொண்டு செல்லக்கூடாதென சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த தொற்றா நோய்கள் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் சமித சிரிதுங்க, எரிவாயு சிலிண்டரை கிடைமட்டமாக கொண்டு சென்றால் பாதுகாப்பு வால்வு பாதிக்கப்படும் என தெரிவித்தார்.

சிலிண்டரை எடுத்துச் செல்லும் போது செங்குத்தாக வைக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட இலங்கை தேசிய வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் செனித லியனகே, ஒருவர் தீப்பற்றி எரிந்தால் அவர்கள் ஓடாமல், வாயுவை விட்டு விலகி தரையில் உருள வேண்டும் என்றார்.

ஓடுவது தீக்காயங்களை மோசமாக்கும் என்று விளக்கினார்.

தீக்காயங்களுக்கு முதலுதவி அளிக்கும் போது, எரிந்த மேற்பரப்புகளை ஓடும் நீரில் கழுவ  வேண்டும்.

தீக்காயங்கள் தோலின் மேற்பரப்பில் அதிக வெப்பநிலையை ஏற்படுத்துகின்றன,
மற்றும் சுமார் 20 நிமிடங்கள் ஓடும் நீரில் கழுவாமல் இருந்தால் ஆழமான தோலுக்கு பரவலாம் என்றார்.

spot_imgspot_img

More like this
Related

மனைவியின் தங்கையில் கண் வைத்த இராணுவச்சிப்பாய் கைது!

தனது மனைவியின் தங்கையான 15 வயது பாடசாலை மாணவியை வன்புணர்வு செய்த...

வெளிநாட்டுக்கு தப்பியோடிய நீதிமன்ற உத்தியோகத்தர்

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான சலிந்து மல்சித...

நாமலுக்கு விளக்கமறியல்!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்