இலங்கையின் மொத்த கடனை அடைக்க நான் தயார்; ஐ.நா சபை ஏற்றுக் கொள்ளுமா?: வவுனியாவில் ஒருவர் ‘வில்லங்க வேலை’!

Date:

இலங்கையின் மொத்த கடனை அடைக்க நான் தயார். ஐ.நா சபை ஏற்றுக் கொள்ளுமா? எனத் தெரிவித்து வவுனியாவில் தனிநபர் ஒருவர் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தார்.

வவுனியா நகர மணிக்கூபுர சந்தியில் நின்று குறித்த நபர் இன்று (29) போராட்டத்தை முன்னெடுத்திருந்தார்.

இதன்போது, அவர் இலங்கை தேசியக் கொடியை ஏந்தியிருந்ததுடன் ‘இலங்கையின் மொத்த கடனை அடைக்க நான் தயார். இதை ஐ.நா சபை ஏற்றுக் கொள்ளுமா?, எங்களை துன்பத்தில் இருந்து காப்பாற்றுமா? இதற்கு மக்கள் நாம் ஒன்றுபடுவோம் ‘ என எழுதப்பட்ட சுலோக அட்டையையும் ஏந்தியிருந்தார்.

குறித்த தனிநபரின் கவனயீர்ப்பு போராட்டத்தால் மணிக்கூட்டு கோபுர சந்தியில் போக்குவரத்து இடையூறு ஏற்படுவதாக பொலிசார் அறிவுறுத்தியதையடுத்து, பழைய பேருந்து நிலையம் முன்பாக சென்று சிறிது நேரம் போராட்டத்தில் ஈடுபட்டதுடன், அதன் பின் அங்கிருந்து சென்றிருந்தார்.

spot_imgspot_img

More like this
Related

மனைவியின் தங்கையில் கண் வைத்த இராணுவச்சிப்பாய் கைது!

தனது மனைவியின் தங்கையான 15 வயது பாடசாலை மாணவியை வன்புணர்வு செய்த...

வெளிநாட்டுக்கு தப்பியோடிய நீதிமன்ற உத்தியோகத்தர்

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான சலிந்து மல்சித...

நாமலுக்கு விளக்கமறியல்!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்