Pagetamil
இலங்கை

கிளிநொச்சியில் காணாமல் போன பெண்ணின் சடலம் உரப்பையில் கட்டிய நிலையில் மீட்பு!

கிளிநொச்சி அம்பாள்குளத்தில் காணாமல் போயுள்ள மூதாட்டியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

அவரது வீடு அமைந்துள்ள அம்பாள்குளத்திலிருந்து சில கிலோமீற்றர்கள் தொலைவில் உள்ள யூனியன்குளத்தில் சடலம் மீட்கப்பட்டுள்ளது. உரப்பையொன்றில் கட்டப்பட்ட நிலையில் சடலம் காணப்படுகிறது.

பாலமொன்றின் கீழ் சடலம் காணப்படுகிறது.

லண்டனில் மகனுடன் வசித்து வந்த இராசேந்திரம் இராசலட்சுமி (67) என்பவர் கடந்த 3 வருடங்களின் முன் இலங்கை திரும்பியுள்ளார்.

கிளிநொச்சி உதயநகர் பகுதியில் உள்ள தனது காணியை பார்ப்பதற்காக அம்பாள்குளம் பகுதியில் வாடகைக்கு வீடெடுத்து தங்கியிருந்துள்ளார்.

தனியாக வசித்து வந்திருந்த நிலையில் நேற்றயை தினம் வங்கிக்கு சென்று திரும்பியதாகவும், பி.பகல் 3.00 மணி முதல் 6.00 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் அவர் காணாமல் போயுள்ளார்.

குறித்த பெண் இவ்வாறு காணாமல் போயுள்ள விடயம் நேற்று மாலை 7.20 மணியளவிலேயே உறவினர்களுக்கு தெரியவந்துள்ளது.

குறித்த பெண் காணாமல் போயுள்ளமை தொடர்பில் வீட்டு உரியைமாளரால் நேற்று மாலை 6.00 மணியவில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து சம்பவ இத்திற்கு சென்றுள்ள கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர். வீட்டின் உள்ளே இரத்தக் கறைகள் காணப்படுவதனால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில் அம்பாள்குளம் பகுதியியை சேர்ந்த 22 வயதுடைய இளம் குடும்பத்தர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்றது.

குறித்த சந்தேக நபரின் வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டு சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. குறித்த சந்தேக நபர்களை அழைத்து சென்று பொலிசார் அடையாளம் காட்டியுள்ளனர்.

குறித்த சடலம் சம்பவம் இடம்பெற்ற பகுதியிலிருந்து சுமார் 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கந்தபுரம் பரப்பாலம் பகுதியில் பொதி செய்யப்பட்டு வீசப்பட்டுள்ளது. குறித்த பாலத்தில் அதிகளவான முதலைகள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இன்னொருவரின் உதவியுடன் மோட்டார் சைக்கிளில் எடுத்து வந்து வீசியுள்ளதாக தெரியவருகின்றது.

இவ்வாறு உயிழந்த பெண் பூநகரி தம்பிராய் பகுதியை சேர்ந்தவர் என்றும் அவரது 5 பிள்ளைகளும் வெளிநாட்டில் வசித்து வருவதாகவும், கணவர் விவசாயம் செய்து வருவதாகவும் தெரியவந்துள்ளதாக மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

இவ்வாறு காணாமல் போயுள்ள பெண் பூநகரி தம்பிராய் பகுதியை சேர்ந்தவர் என்றும் அவரது 5 பிள்ளைகளும் வெளிநாட்டில் வசித்து வருவதாகவும், கணவர் விவசாயம் செய்து வருவதாகவும் தெரியவந்துள்ளதாக மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையிலேயே சடலம் யூனியன்குளத்தில் மீட்கப்பட்டது.

முன்னைய செய்தி: கிளிநொச்சியில் கிணற்றிற்குள் மிதக்கும் பெண்ணின் சடலம்: நடந்தது என்ன?

இதேவேளை, இந்த வீட்டில் வாடகைக்கு குடியிருந்த ஆசிரியையொருவர் கடந்த சில வருடங்களின் முன்னர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்

34 வருடங்களின் பின் பலாலி- வசாவிளான் வீதி கட்டுப்பாடுகளுடன் திறப்பு: வாகனத்தை திருப்பவும் அனுமதியில்லை!

Pagetamil

அமெரிக்க வரி: இன்று அனைத்துக்கட்சிகள் கூட்டம்!

Pagetamil

யாழில் பசு மாடு புல் மேய்ந்ததால் நடந்த அக்கப்போர்!

Pagetamil

யாழில் விபச்சார சந்தேகத்தில் கைதான நடுத்தர வயது பெண்கள்!

Pagetamil

மேர்வினுக்கு விளக்கமறியல்… பிரசன்னவுக்கு பிடியாணை!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!