கிளிநொச்சியில் பெண்ணொருவரின் சடலம் கிணற்றிற்குள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
அம்பாள்குளம் பகுதியிலுள்ள கிணற்றிற்குள் பெண்ணின் சடலம் மிதப்பதாக பொலிசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் தற்போது அங்கு சென்று பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பெண்ணின் சடலம் இதுவரை கிணற்றிற்குள்ளிருந்து மீட்கப்படவில்லை. அடித்துக் கொல்லப்பட்ட பின்னர் சடலம் கிணற்றிற்குள் வீசப்பட்டதா அல்லது தற்கொலையா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
1