25.4 C
Jaffna
January 21, 2025
Pagetamil
மருத்துவம்

டாக்டர் ஞானப்பழத்தை கேளுங்கள்: விந்து முந்துதல் பிரச்சனையை சரி செய்வது எப்படி?

எம்.பிரதாபன்
தாவடி

கேள்வி: டாக்டர் ஞானப்பழம். நான் திருமணம் செய்து 4 மாதங்களாகிறது. நாங்கள் சந்தோசமாகவே இருக்கிறோம். ஆனால், ஒரு சிக்கல். எனக்கு விந்து முந்தி விடுகிறது. இதை சரி செய்யலாமா? எப்படி சரி செய்வது.

டாக்டர் ஞானப்பழம்: சொன்னால் நம்ப மாட்டீர்கள். விந்து முந்துதல் பிரச்னை உலகத்திலிருக்கிற 70 சதவிகித ஆண்களுக்கு இருக்கிறது. செக்ஸ் ஆரம்பித்த 2 நிமிடங்களில் இவர்களுக்கு விந்து வெளியேறி விடுகிறது. ஆனால், அந்த 2 நிமிடங்களுக்குள் ஆண் உச்சக்கட்டம் அடைந்து விடுவான். அப்படியென்றால், ஏன் ஆண்கள் இதுபற்றிக் கவலைப்பட வேண்டும் என்று சிலருக்குத் தோன்றலாம்.

அதற்கான பதில், ஆண் விந்து முந்தும்போதே உச்சக்கட்டத்தை அடைந்து விடுவான். ஆனால், அவன் மனைவிக்கோ தொடர்ந்து 14 நிமிடங்கள் தாம்பத்திய உறவுகொண்டால்தான் உச்சக்கட்டம் அடைய முடியும் என்கின்றன பல ஆராய்ச்சி முடிவுகள்.

இன்னொரு விஷயத்தையும் தெரிந்துகொள்ளுங்கள். தொடர்ந்து 14 நிமிடங்கள் தாம்பத்திய உறவில் ஈடுபட்டு மனைவியை உச்சக்கட்டம் அடைய வைப்பதற்கான சாத்தியம் மிக மிகக் குறைவு. பெரும்பான்மை ஆண்களால் இது முடியாது. இந்த இடத்தில்தான், விந்து முந்துதல் என்கிற ஆண்களின் பிரச்னை தம்பதியரின் பிரச்னையாகிறது.

`தன்னுடைய மனைவியைத் திருப்தி செய்ய முடியவில்லை’ என்கிற எண்ணம் ஆணுக்கு வந்துவிடும். சில நாள்கள், சில வாரங்கள், சில மாதங்கள் என்று பொறுத்துக்கொள்கிற மனைவி, ஒருகட்டத்தில் தாம்பத்திய உறவைச் சலிப்புடன் தவிர்க்கப் பார்ப்பார் அல்லது தலையெழுத்தே என்று உடன்படுவார். ஒருசிலர் வார்த்தைகளால் தங்கள் உணர்வை வெளிப்படுத்திவிடலாம்.

சரி, இந்தப் பிரச்னைக்கு தீர்விருக்கிறதா என்றால், இருக்கிறது. விந்து முந்துதல் பிரச்னைக்கு மருத்துவரைச் சந்தித்து அதற்கான மருந்து, மாத்திரை எடுத்துக்கொள்ளுங்கள்.

கூடவே A, B, C, D, E, F என்ற முறையையும் கையாளுங்கள். A என்பது பெண்ணுறுப்பின் உள்ளேயுள்ள மேல் பகுதி. இந்த இடத்தைத் தூண்டலாம். B என்பது மார்பகம். இதைத் தூண்டினாலும் 2 முதல் 3 சதவிகிதப் பெண்கள் உச்சக்கட்டத்தை அடைந்துவிடுவதாக ஆராய்ச்சிகள் நிரூபித்துள்ளன. C என்பது கிளிட்டோரிஸ். ஆணுறுப்புக்கு இணையானது. பெண்ணுறுப்புக்குள் மேல் பகுதியில் இருக்கும். D என்பதும் பெண்ணுறுப்பின் மேல் பகுதியினுள்ளே இருப்பதுதான். இந்தப் பகுதியைத் தூண்டுவதன் மூலம் உங்கள் இணையர் உச்சக்கட்டம் அடைந்தால் அந்தப் பகுதி லேசாக வீக்கமடையும் என்று ஆராய்ச்சிகள் கண்டுபிடித்திருக்கின்றன. அடுத்து E. இந்த ஸ்டெப்பில் தம்பதியர் பிறப்புறுப்புகள் இணைய வேண்டும். கடைசியாக F. இது, இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் நான் சொல்லியிருக்கிற மனைவி கணவனுக்கு மேலிருக்கும் நிலை.

விந்து முந்துதல் நிகழ்ந்தாலும் நான் மேலே சொன்னவற்றில் E-யைத் தவிர்த்து மற்ற ஐந்து முறைகளின் மூலம் உங்கள் வாழ்க்கைத்துணைக்கு உச்சக்கட்டம் வரவழைத்து திருப்திப்படுத்திவிடலாம். உங்களுக்கு விந்து முந்துதல் காரணமாக வருகிற குற்றவுணர்ச்சியும் சரியாகிவிடும்.

பெண் (பெயர் குறிப்பிடவில்லை)
தாவடி

கேள்வி: எனக்கு வயது 25. பெண்ணுறுப்பில் கொப்புளம் வந்து சரியாகி விட்டது. ஆனால், அந்த இடத்தில் சின்ன குழி மாதிரி இருக்கிறது. இதனால் ஏதாவது பிரச்னை வருமா ?

டாக்டர் ஞானப்பழம்:  அந்த இடத்திலிருப்பது மென்மையான திசுக்கள் என்பதால், சரியாவதற்கு நேரம் எடுத்துக்கொள்ளத்தான் செய்யும். மற்றபடி, உங்கள் கன்னத்தில் ஒரு கொப்புளம் வந்து, அது ஆறியதும் அந்த இடத்தில் குழி ஏற்பட்டால் எப்படி எடுத்துக் கொள்வீர்களோ அப்படித்தான் இதையும் எடுத்துக்கொள்ள வேண்டும். அதை இந்த அளவுக்கு உன்னிப்பாகக் கவனிக்கிறீர்கள் என்றால், நீங்கள் பதற்றமாக இருக்கிறீர்கள் என்பது புரிகிறது. இது தேவையே இல்லை. இதனால் உங்களுக்கு ஒரு பிரச்னையும் வரப்போவதில்லை. தைரியமாக இருங்கள்.”

பெண் (பெயர் குறிப்பிடவில்லை)
தாவடி

கேள்வி: நான் 29 வயது நிரம்பிய ஆண். எனக்கு சிறு வயதிலிருந்தே சுய இன்பத்தில் அதீத ஆர்வம். வேலை மற்றும் குடும்ப சூழ்நிலைகளால் ஸ்டிரெஸ் வந்தால் ஸ்ட்ரெஸ் பஸ்டராக சுய இன்பம் அனுபவிப்பேன். ஒரு நாளைக்கு ஒருமுறையாவது சுய இன்பத்தில் ஈடுபட்டு விடுவேன். சமீபத்தில், ஆண்குறி முன்தோலை பின்னிழுத்து நீரில் தூய்மைப்படுத்தும்போது, மொட்டின் முடிவுப்பகுதி கருநீல நிறத்தில் இருப்பதைப் பார்த்தேன். ஆனால், வலியோ வீக்கமோ இல்லை. இருந்தாலும் பயமாக உள்ளது. இப்போது எனக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருப்பதால், தாம்பத்திய வாழ்வில் இதன் காரணமாக ஏதேனும் பிரச்னை வருமோ என்று பயமாக உள்ளது.

டாக்டர் ஞானப்பழம்: சுய இன்பத்துக்கும் இந்த நிற மாற்றத்துக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. ஆணுறுப்பில் இப்படி நிறமாற்றம் ஏற்படுவது இயல்பானதுதான். அங்கு நிகழ்கிற சின்னச் சின்ன மாற்றங்களை உற்றுப்பார்த்து பயப்படுவது தேவையில்லாதது. இதனால், உங்கள் திருமண வாழ்க்கையில் எந்தப் பிரச்னையும் வராது. ரொம்பவும் பயமாக உணர்ந்தீர்களென்றால், பாலியல் நிபுணரைச் சந்தியுங்கள்.


வாசகர்களே,உங்களிற்கு ஏற்படடும் அந்தரங்க சிக்கல்களை எமக்கு அனுப்பி வைத்தால், உரிய மருத்துவர்களின ஆலோசனைகளை வெளியிடுவோம்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஒழுங்கற்ற தூங்கும் முறை நீரிழிவு நோயின் அபாயத்தை அதிகரிக்கும்: ஆய்வு

Pagetamil

ஐந்தில் ஒரு பெண்கள் வாழ்நாளில் ஒரு முறையும் உடலுறவில் உச்சக்கட்டத்தை அனுபவிப்பதில்லை!

Pagetamil

புரையேறும் போது தலையில் தட்டலாமா?

Pagetamil

டாக்டர் ஞானப்பழத்தை கேளுங்கள்!

Pagetamil

மூட்டுவலி உள்ளவர்கள் தரையில் உட்காரக்கூடாது என்பது உண்மையா?

Pagetamil

Leave a Comment