அமைச்சர் டக்ளஸின் உறுதிமொழியையடுத்து கடற்றொழிலாளர்களின் போராட்டம் முடிவுக்கு வந்தது! (VIDEO)

Date:

இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனம் உட்பட பல்வேறு மீனவ அமைப்புக்களின் ஏற்பாட்டில் இன்று யாழ் மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்டு நடத்தப்பட்ட போராட்டம், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் உறுதிமொழியையடுத்து நிறுத்தப்பட்டது.

இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து, தடைசெய்யப்பட்ட ஆழ்மடி இழுவைமீன்பிடி முறையை மேற்கொள்வதால் இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதுடன், மீனவர்களின் வலைகளும் அறுக்கப்பட்டு வருகிறது.

இதனால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக தொடர்ந்து குற்றம்சாட்டும் மீனவர்கள், அத்துமீறி நுழையும் இந்திய மீனவர்களை கைது செய்வதுடன், அவர்களை விடுவிக்காமல் சிறையிலடைக்க வேண்டுமென வலியுறுத்தி, இன்று காலை 9.30 மணியளவில் யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளன முன்றலில் இருந்து கடற்றொழிலாளர்களால் ஆரம்பிக்கப்பட்ட பேரணி யாழ் மாவட்ட செயலக முன்றலில் நிறைவடைந்தது.

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களை கைது செய், கைது செய்த படகுகளைப் விடக்கூடாது, எமது வாழ்வாதாரத்தை அழிக்காதே போன்ற பல்வேறு கோசங்கள் இதன்போது எழுப்பப்பட்டது.

போராட்டத்தின் காரணமாக ஏ9 வீதி மற்றும் யாழ் மாவட்ட செயலகம் சில மணிநேரம் முடங்கியிருந்ததுடன் வீதியூடான போக்குவரத்து முடங்கியது.

இதனையடுத்து போராட்ட இடத்திற்கு வந்த கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தான் இது தொடர்பாக ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் பேசி தீர்வை பெற்றுத் தருவதாக வாக்குறுதியளித்ததை அடுத்து தாங்கள் போராட்டத்தை கைவிடுவதாக கடற்றொழிலாளர்கள் தெரிவித்தனர்.

spot_imgspot_img

More like this
Related

மின்சாரம் தாக்கி இளைஞன் பலி

கிளிநொச்சியில் மின்சாரம் தாக்கி இளைஞன் உயிரிழந்துள்ளார். தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னைநீராவி -...

ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல்

அப்பாச்சி ஹெலிகொப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டதற்குப் பதிலடியாக, செவ்வாய்க்கிழமை மாலை அமெரிக்க இராணுவம்...

கிளிநொச்சி இளைஞன் கைது செய்யப்பட்டதை கண்டிக்கும் கனடாவின் பிராம்டன் நகர மேயர்!

இலங்கையின் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ், 24 வயதான சொல்லிசை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்