தொழில்நுட்பம்

தொலைக்காட்சி திரையை நக்கினால் விரும்பிய உணவின் சுவையை அனுபவிக்கலாம்!

ஜப்பானியப் பேராசிரியர் ஒருவர், தொலைக்காட்சித் திரையை நக்கினால், உணவின் சுவையை அனுபவிக்கும் புதிய தொடக்கமாதிரி கருவி ஒன்றை உருவாக்கியுள்ளார்.

Taste the TV என்று பெயரிடப்பட்டுள்ள அந்தக் கருவியில் 10 விதமான சுவைப் பெட்டிகள் பொருத்தப்பட்டுள்ளன.

குறிப்பிட்ட உணவின் சுவையை உருவாக்க அவை பயன்படுத்தப்படுகின்றன.

பின்னர், தொலைக்காட்சி திரை மீதுள்ள சுத்தமான தாள் ஒன்றில் அந்தச் சுவை மாதிரி வரும்.

அதைப் பார்வையாளர்கள் சுவைத்துப் பார்க்கலாம்.

கிருமித்தொற்றுச் சூழலில், இது போன்ற வழிகள் மூலம் மக்கள் வெளி உலகத்துடன் தொடர்பில் இருக்கலாம் என்று மெய்ஜி பல்கலை பேராசிரியர் ஹோமேய் மியாஷிடா  கூறினார்.

வீட்டிலிருந்தவாறே உலகின் இன்னொரு பக்கத்தில் உள்ள உணவகத்தில் வழங்கப்படும் உணவைச் சுவைக்கும் அனுபவத்தை அளிப்பதே கருவியின் நோக்கம் என்றார் அவர்.

அந்தக் கருவியின் தொடக்கமாதிரியை உருவாக்க சுமார் ஓராண்டாகியதாக அவர் தெரிவித்தார்.

அதன் இறுதி மாதிரியை உருவாக்க 875 டொலர் செலவாகும் என்று அவர் குறிப்பிட்டார்.

வறுக்கப்பட்ட ரொட்டி துண்டுக்கு பீட்சா அல்லது சாக்லேட் சுவையைப் பயன்படுத்தக்கூடிய சாதனம் போன்ற பயன்பாடுகளுக்கு தனது ஸ்ப்ரே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது குறித்தும் மியாஷிடா நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

இசைத் தொகுப்புக்களை உருவாக்குவதை போல, உலகெங்கிலும் உள்ள சுவைகளைப் பதிவிறக்கம் செய்து பயனர்கள் அனுபவிக்கக்கூடிய ஒரு தளத்தை உருவாக்கவும் அவர் திட்டமிட்டுள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

விரைவில் சாம்சங் டப்லெட் அறிமுகம்

divya divya

ஆன்ட்ராய்டு வாட்ஸ்அப் (Android whatsapp) பயனர்களுக்கான செய்தி; வாட்ஸ்அப்பில் புது மாற்றம்!

divya divya

கோஜீரோ மொபிலிட்டி (GoZero Mobility) இப்போது அதன் ஸ்கெல்லிக் புரோ இ-பைக் அறிமுகம்!

divya divya

Leave a Comment

error: Alert: Content is protected !!