யாழ்.பல்கலைக்கழகத்தின் சிங்கள மாணவர்களிற்கிடையில் நேற்று (19) இரவு இடம்பெற்ற மோதலில் யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் ஐவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விஞ்ஞான பீடத்தின் இரண்டாம் வருட மாணவர்கள் மற்றும் மூன்றாம் வருட மாணவர்களே மோதிக் கொண்டனர்.
பால்பண்ணை வீதியிலுள்ள விடுதியில் மது அருந்தி விட்டு, மோதலில் ஈடுபட்டனர்.
தாக்குதலில் காயமடைந்த ஐந்து மாணவர்கள் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களில் மூவர் வைத்தியசாலையில் இருந்து வெளியேறிய நிலையில், இருவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1