கிழக்கு மாகாண ஆசிரியர்களின் வருடாந்த இடமாற்றம் அரசியல்வாதிகளின் விருப்பத்திற்கு அமையவே இடம்பெற்றுள்ளதாகவும் அவ் இடமாற்றம் சட்ட விரோதமானது என கிழக்கு மாகாண ஆசிரியர் சேவைகள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது
இன்று (20) திங்கட்கிழமை கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்னாள் ஏற்பாடு செய்யப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போதே இவ்வாறு தெரிவித்தனர்
மேலும் இவ் ஆர்ப்பாட்டம் ஆனது கிழக்கு மாகாண ஆசிரியர்கள் முறையற்ற விதத்தில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் கிழக்கு மாகாண முஸ்லிம் அரசியல்வாதிகளினாலுமல் இடமாற்றம் அவர்களுக்கு ஏற்றார் போல் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாகவும் தமக்குரிய முறையான இடமாற்றத்தை பெற்று தருமாறு கோரியும் கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டிருந்தனர்
ஆர்ப்பாட்டத்தின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இலங்கை ஆசிரியர் சேவைகள் சங்கத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் பொன்னுத்துரை உதயன் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.
வருடாந்த ஆசிரியர் இடமாற்றம் தொடர்பாக கிழக்கு மாகாண ஆசிரியர்கள் கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் மற்றும் கிழக்கு மாகாண கல்வி வருடாந்த ஆசிரியர் இடமாற்றம் செயலாளரை சந்தித்து அதன் பின்னர் நியாயமான ஆசிரியர் இடமாற்றத்தை கொள்கைக்கு அமைய உரிய சட்டத்தின்படி இடம்பெற்ற இடமாற்றம் ஆனது ஒரு சில வலய கல்வி அலுவலகத்திற்கு உட்பட்ட ஆசிரியர்களுக்கு உரிய முறையில் இவ்விடம் ஆற்ற கடிதங்கள் அனுப்பப்பட்டு வருகின்றன நிலையில் மேலும் சில பழைய கல்வி அலுவலகத்திற்கு உட்பட்ட ஆசிரியர்களுக்கு இதுவரை இடம் மாற்றத்திற்கான கடிதங்கள் அனுப்ப படாமையால் இன்றைய தினம் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டதாகவும் தெரிவித்தார்
மேலும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் பின்னர் திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் கோரிக்கை அடங்கிய மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.
கையளிக்கப்பட்ட மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது சமத்துவ அடிப்படையில் கிழக்கு மாகாண வருடாந்த ஆசிரியர் இடமாற்றத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இம்மாதம் 15ஆம் திகதி மாகாண கல்விப் பணிப்பாளர் உடன் ஆசிரியர் சங்கத்திற்கும் இடையில் கலந்துரையாடல் சில வளையங்கள் இடமாற்றங்கள் நிறுத்தி வைப்பதற்கு தீர்மானிக்கப்பட்ட ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள் ஊடாக அறிய கிடைத்ததாகவும் குறிப்பிட்ட வளங்களுக்கான இடமாற்றத்தை நிறுத்தி வைப்பதற்கு எடுக்கப்பட்ட தீர்மானமானது இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அரசியலமைப்பின் உறுப்புரை 12 ஒன்றாகும் அமைய சட்டத்திற்கு முன் அனைவரும் சமமானவர்கள் ஆவதுடன் அவர்கள் சமமாக சட்டத்தினால் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அடிப்படை உரிமை உறுப்புரிமை மீறுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது எதிர்வரும் ஜனவரி மூன்றாம் திகதி நடைமுறைப்படுத்த இருக்கும் ஆசிரியர் இடமாற்றத்தை சமத்துவ அடிப்படையில் குறித்த இடமாற்ற பட்டியலில் இடம் பெற்று சகல ஆசிரியர்களும் பெற்றுக்கொள்வதற்கு நம்பத் தகுந்தது வெளிப்படையான எமது இடமாற்றத்தை நடைமுறைப்படுத்துமாறு கோரிக்கை ஒன்றினை அடங்கிய மகஜர் ஒன்றும் இதன்போது கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளரிடம் கையளிக்கப்பட்டது.