பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலத்தில் கல்வி பயிலும் 17 வயதான மாணவியொருவர் மாயமாகியுள்ளார்.
பதுளை, கலன் பெருந்தோட்ட பகுதியை சேர்ந்த மாணவி, மேலதிக வகுப்பிற்காக செல்வதாக கூறி நேற்று (19) வீட்டிலிருந்த வெளியேறியவர் இதுவரை வீடு திரும்பவில்லை.
இன்று இது குறித்து பதுளை பொலிஸ் நிலையத்தில் இன்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலதிக வகுப்பிற்கு மாணவி எடுத்துச் சென்ற புத்தகப்பை, காலணிகள், பதுளை, கொபோ பகுதியிலுள்ள நீர்நிலையொன்றின் அருகிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, இளைஞர்கள் குழு, அந்த நீர்நிலையில் தேடுதல் மேற்கொண்ட போதும், பலன் கிட்டியிருக்கவில்லை.
பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமாரிடம் குடும்பத்தினர் முறையிட்டதை தொடர்ந்து, அவரும் இந்த விகரத்தில் தலைவிட்டுள்ளார்




