எரிவாயு சிலிண்டர் அடுப்புகள் வெடித்துவரும் நிலையில் புதிதாக வாங்கிய காஸ் சிலின்டர் வெடிக்க கூடாதென கடவுளுக்கு நேர்த்தி வைத்து, துணியில் காசுகட்டி அதனை சிலிண்டரில் கட்டி சமையலில் ஈடுபட்டு வருகின்ற சம்பவமொன்று மட்டக்களப்பு ஆரையம்பதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றை பொலிஸார் முற்றுகையிட்டு சோதனையின் போது கசிப்புடன் பெண்ணொருவரை கைது செய்தனர்
இதேவேளை, குறித்த வீட்டின் சமையலறையில் சோதனையின்போது அங்கிருந்த எரிவாயு சிலிண்டரில், மஞ்சள் துணியொன்றில் காசு கட்டப்பட்டுள்ளதை அவதானித்துள்ளார்.
இது தொடர்பாக பொலிஸார் விசாரித்தபோது எரிவாயு சிலிண்டர் அடுப்பு வெடித்துவிடக் கூடாதென கடவுளுக்கு நேர்ந்து காசு கட்டியுள்ளதாக அப்பெண் விளக்கமளித்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1