மக்களை திசைதிருப்ப கோட்டா அரசின் அடுத்த நாடகம் இதுதான்: சம்பிக்க எச்சரிக்கை!

Date:

அநாமதேய நபர் ஒருவரிடமிருந்து தனக்கு தொலைபேசி வழியாக அச்சுறுத்தல் வந்ததாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

தன்னைப் பற்றிய ஓடியோ கிளிப்பை வெளியிடுவேன் என்று அவர் அச்சுறுத்தியதாகவும் தெரிவித்தார்.

தனக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டு, நிலுவையில் உள்ள வழக்கின் சாட்சியாக அழைப்பாளர் தன்னை அடையாளப்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.

““இந்த நபர் டிசம்பர் 14 செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் 12 மணி வரை எனக்கு போன் செய்து, தனக்கு எதிராக தொடரப்பட்ட மற்றும் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்கின் ஒவ்வொரு விவரமும் தெரியும் என்றார்.

எனக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ள விபத்தில் சிக்கிய சந்தீப் குணவர்தனவை இராஜாங்க அமைச்சர் ஒருவரைப் பார்க்க அழைத்துச் சென்றவர் தாம் என்று அழைப்பாளர் கூறினார். எனக்கு எதிராக சாட்சியமளிக்கும் அனைவரையும் மற்றுமொரு அமைச்சரவை அமைச்சரிடம் கொண்டு சென்றவர் தான் எனவும் அவர் கூறினார்.

எனது ஓடியோ கிளிப்பை வரும் நாட்களில் வெளியிடுவேன், விரைவில் என்னை சந்திக்க வருவேன் என்றார். இது நிச்சயமாக பொய்யானது. இந்த நபரை சந்திக்க மாட்டேன் என்றும் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

“இது அரசாங்கத்தின் எதிரிகளை அழிக்கும் தந்திரம். நாடும் அரசாங்கமும் கடும் நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நேரத்தில் மக்களின் கவனத்தை திசை திருப்பும் நாடகங்களில் இதுவும் ஒன்று” என்று அவர் மேலும் கூறினார்.

spot_imgspot_img

More like this
Related

இந்திய அரசின் நிதியுதவியுடன் காலியில் அமைக்கப்பட்ட 22-வது மாதிரி கிராமம் பயனாளிகளிடம் ஒப்படைப்பு–

இந்திய அரசின் நிதியுதவியுடன்  காலி மாவட்டத்தில் 'திடுலா'  (Didula)   மாதிரி கிராமத்தில்  நிர்மானிக்கப்பட்ட...

முத்தரப்பு ஒருநாள் தொடர்: இங்கிலாந்து நிர்ணயித்த மெகா இலக்கை விரட்டியடித்தது இலங்கை!

முத்தரப்பு ஒருநாள் தொடரின் 3வது போட்டியில் இங்கிலாந்து நிர்ணயித்த மெகா இலக்கை,...

யாழ். இணுவில் சந்தியில் கோர விபத்து! துவிச்சக்கர வண்டியில் சென்ற 67 வயதுடையவர் பலி

யாழ்ப்பாணம் - இணுவில் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் சம்பவ...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்