திருமணத்திற்குப் பிறகு மீண்டும் சல்மான் கான் படத்தில் இணையும் கத்ரினா கைஃப்!

Date:

நடிகை கத்ரினா கைஃப் சல்மான் கானின் ‘டைகர் 3’ படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் இணைய உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சல்மான் கான் மற்றும் கத்ரினா கைஃப் நடிப்பில் வெளியான டைகர் சீரிஸ் படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து தற்போது டைகர் படத்தின் மூன்றாம் பாகம் உருவாகி வருகிறது. படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு மட்டும் மீதமுள்ளது. இப்படத்தை மனீஷ் ஷர்மா இயக்கி வருகிறார்.

இந்நிலையில் இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்த கத்ரீனா கைஃப் – விக்கி கௌஷல் ஜோடி கடந்த டிசம்பர் 9 ஆம் திகதி திருமணம் செய்துகொண்டனர். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் மிக பிரம்மாண்டமாக நடந்த அவர்கள் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில், நடிகை கத்ரினா கைப் மீண்டும் டைகர் 3 படப்பிடிப்பில் இணைய உள்ளதாகக் கூறப்படுகிறது. படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்கவுள்ளது. 15 நாட்கள் நடக்கும் படப்பிடிப்பில் கத்ரீனா கைஃப் மற்றும் சல்மான் கான் இடம் பெறும் காட்சிகள் படமாக்கப்படவுள்ளன. யுள்ளார்.

ஸ்பை த்ரில்லர் கதைக்களத்தைக் கொண்ட ’டைகர் 3’ படப்பிடிப்பு ரஷ்யா, துருக்கி, அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வந்த நிலையில், தற்போது டெல்லியில் நடைபெறுகிறது.

spot_imgspot_img

More like this
Related

ஷிராந்திக்கு பிணை!

‘சிரிலிய சவிய’ கணக்கு தொடர்பான விசாரணைகளுக்கு அமைய இலஞ்ச ஊழல் விசாரணை...

மட்டக்களப்பில் மனைவியின் சகோதரியை 16 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த அத்தானுக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் மனைவியின் சகோதரியான 16 வயது சிறுமி...

யாழ்ப்பாண மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினரின் பயன்பாட்டிலிருந்த 11.23 ஏக்கர் காணிகள் உத்தியோகபூர்வமாக விடுவிப்பு!

யாழ்ப்பாண மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினரின் பயன்பாட்டிலிருந்த மொத்தம் 11.23 ஏக்கர் காணிகளை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்