‘பிளட் மணி’ டிரெய்லரை வெளியிட்ட விஜய் சேதுபதி!

Date:

சிரிஷ் மற்றும் பிரியா பவானி சங்கர் கூட்டணியில் உருவாகியுள்ள ‘பிளட் மணி’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

கே.எம்.சர்ஜுன்‌ இயக்கத்தில் த்ரில்லர் டிராமா படமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘பிளட் மணி’. இந்த படத்தில் சிரிஷ் கதாநாயகனாகவும், பிரியா பவானி சங்கர் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர்.

எம்பரர் எண்டர்டெயின்மெண்ட் சார்பாக தயாரிப்பாளர் இர்பான் மாலிக் தயாரித்துள்ள இப்படத்திற்கு சதிஷ் ரகுநந்தன் இசையமைப்பாளராகவும், பாலமுருகன் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளனர்.

இப்படத்தில் பிரியா பவானி சங்கர் பத்திரிக்கையாளர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மேலும் இந்த படத்தில் கிஷோர், பஞ்சு சுப்பு, ‘ராட்சசன்’ வினோத் சாகர், ‘கலைமாமணி’ ஶ்ரீலேகா ராஜேந்திரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

தற்போது இப்படத்தின் இறுதிக் கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு எதிர்பார்ப்பு நிலவுகிறது.

ரிலீசுக்கு தயாராக உள்ள இப்படம் வரும் டிசம்பர் 24 ஆம் திகதி ZEE5 ஓடிடித்தளத்தில் வெளியாகவுள்ளது.

சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியானது. இதைத்தொடர்ந்து இப்படத்தின் டிரெய்லரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார்.

த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த டிரெய்லர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

இலங்கையில் நாடளாவிய மின்வெட்டு! மின்சார விநியோகத்தை மீளமைக்கும் பணிகள் தீவிரம்

இலங்கையின் பல பகுதிகளில் இன்று (17) மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தேசிய...

இலங்கைக்கு பெருந்தொகை போதைப்பொருளை கடத்த முயன்ற விஜய் கட்சி பிரமுகர் சிக்கினார்!

இலங்கைக்கு கடத்துவதற்காக ரூ.135 கோடி மதிப்பிலான மெத்தம்பெட்டமைன் பதுக்கி வைத்திருந்த நாகையைச்...

‘மஹிந்தவுக்கு ஏவுகணை அடித்தால் எல்லாம் சரியாவிடும்’: எக்னொலிகொட வழக்கில் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் சாட்சியம்!

மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில், ஜனாதிபதி பயணிக்கும் விமானத்தின் மீது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்